Advertisment

மீண்டும் சன் டி.வி சீரியலில் நந்தன்... ஜோடியாக படையப்பா குழந்தை நட்சத்திரம்?

தற்போது சித்தி 2 முடிவடைந்துவிட்ட நிலையில், மீண்டும் நந்தன் சன்.டிவி சீரியலில் நடிக்க உள்ளதாவும் அவருக்கு ஜோடியாக ஹிமா பிந்து நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
மீண்டும் சன் டி.வி சீரியலில் நந்தன்... ஜோடியாக படையப்பா குழந்தை நட்சத்திரம்?

சன்டிவியின் சித்தி 2 சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் நந்தன் தற்போது புதிய சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளர்.

Advertisment

சீரியலுக்கு பிரபலமான சன் டிவியில் 90 காலகட்டத்தின் இறுதில் ஒளிபரப்பான சீரியல் சித்தி. இல்லத்தரசிகர்கள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் ராதிகா முதன்மை கேரக்டரில் நடித்திருந்தார்.

இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த சீரியலின் 2-ம் பாகம் சித்தி 2 என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ராதிகா முக்கிய கேரக்டரில் நடித்த இந்த சீரியலில் நந்தன் மற்றும் ப்ரீத்தி சர்மா நாயகன் நாயகியாக நடித்திருந்தனர்.

இந்த சீரியல் தொடங்கப்பட்டத்தில் இருந்து கேரக்டர் மாற்றம் நடைபெற்று வந்த நிலையில், ஒரு கட்டத்தில் ராதிகாவே இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். ஆனாலும் வெண்பா கவின் முக்கியத்துவம் வைத்து கதை நகர்ந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த சீரியல் முடிவுக்கு வந்தது

இதனைத் தொடர்ந்து கவின் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் நந்தன் சன்.டிவியின் புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலர்ஸ் தமிழின் வந்தாள் ஸ்ரீதேவி உள்ளிட்ட தொடர்களிலர் நடித்துள்ள நந்தன் சித்தி 2 மூலம் சன்.டிவி சீரியலில் அறிமுகமானார்.

தற்போது சித்தி 2 முடிவடைந்துவிட்ட நிலையில், மீண்டும் நந்தன் சன்.டிவி சீரியலில் நடிக்க உள்ளதாவும் அவருக்கு ஜோடியாக ஹிமா பிந்து நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் படையப்பா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ஹிமா கலர்ஸ் தமிழின் இதயத்தை திருடாதே சீரியல் மூலம் பிரபலமானார்.இதனிடையே தற்போது சன்.டிவியின் புதிய சீரியலில் நந்தனுடன் நடிக்க இருப்பதாகவும். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chithi 2 Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment