சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நம்பர் 1ஆக கலக்கி வருவது சித்தி 2. இந்த தொடரில் நெகட்டிவ் ரோலில் நடித்து வரும் யாழினிக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். யாழினி கேரக்டரில் நடிப்பவர் பெயர் தர்ஷனா ஸ்ரீபால். திருச்சியை சேர்ந்த இவர் ஃபேஷன் டிசைனிங் முடித்துள்ளார். 4 வருடங்களுக்கு முன்பு ஃபேஷன் டிசைனிங்க்காக சென்னை வந்துள்ளார். பல நிறுவனங்களில் வேலை செய்து வந்த இவருக்கு சன்டிவியில் ஸ்டைலிஸ்டாக ஆக பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது தான் தர்ஷனாவிடம் ஆதித்யா சேனலில் ஆன்கரிங் செய்ய சொல்லி கேட்டுள்ளனர். சிரித்திடு சீசே” என்ற லைவ் ஷோவில் ஆன்கராக இருந்து வந்துள்ளார். அந்த ஷோவிற்கு நல்ல ரீச் இருந்தது. அதன் பிறகு சித்தி 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தர்ஷனாவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் தான் ரோல் மாடல்.
















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”