/tamil-ie/media/media_files/uploads/2020/01/a28-1.jpg)
chithi 2 serial Raadhika Sarathkumar - 'சித்தி 2' சீரியல் ஹீரோ யார் தெரியுமா? இதை நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீங்க
Chithi 2: தனியார் தொலைக்காட்சிகளில் இன்று ஏராளமான மெகா தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் மக்களை சின்னத்திரை ரசிகர்களாக்கியதற்கான பெரும்பங்கு, ‘சித்தி’ சீரியலையே சாரும்.
”கண்ணின்மணி.. கண்ணின்மணி” என்ற அதன் பாட்டு ஒளிபரப்பானதும், எந்த வேலை செய்துக் கொண்டிருந்தாலும், அத்தனையையும் விட்டு விட்டு டிவி முன்னாடி ஆஜராகி விடுவார்கள். 1999ம் ஆண்டு ஒளிபரப்பை தொடங்கிய சித்தி மெகா தொடர் ஒட்டுமொத்த ரசிகர்களையும் டிவி முன்பு கட்டிப் போட்டது. ஆண்கள், பெண்கள் பேதமின்றி வரிசைக் கட்டி ரசித்த தொடர் இது.
தமிழ் டிவி உலகின் மறக்க முடியாத நெடுந்தொடர்களில் இத்தொடருக்கு மிக முக்கிய இடம் உண்டு. ராதிகா, சிவக்குமார் ஆகியோரின் நேர்த்தியான நடிப்பு, பாடல், கதையம்சம், கேரக்டர்கள், ஒளிப்பதிவு என பல கோணங்களில் இந்தத் தொடர் இன்று வரை பெஸ்ட்டான தொடராக உள்ளது.
இந்நிலையில் 22 வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் தற்போது ரெடியாகி, வரும் ஜன.27ம் தேதி ஒளிபரப்பாகவும் உள்ளது. இதுகுறித்த புரமோக்களை சன் டிவி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சித்தி 2 சீரியலின் ஹீரோ யார் என்பதை சீரியல் குழு இன்று அறிவித்துள்ளது.
24, 2020நம்ம கதாநாயகன் இவருதான்.
Chithi2 | Jan 27th onwards | 9 PM#Chithi2#Chithi2OnSunTV#SunTV#SociallySunpic.twitter.com/CoTfkIWxG8
— Sun TV (@SunTV)
நம்ம கதாநாயகன் இவருதான்.
— Sun TV (@SunTV) January 24, 2020
Chithi2 | Jan 27th onwards | 9 PM#Chithi2#Chithi2OnSunTV#SunTV#SociallySunpic.twitter.com/CoTfkIWxG8
கவின் என்பவர் இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
தவிர, சீரியலில் அவரது கதாபாத்திரம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த புரமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.