சித்தி 2 தொடரில் சாரதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொடரப் போகிறாரா என்ற கேள்விக்கு நடிகை ராதிகா பதிலளித்துள்ளார்.
முன்னாக, ட்விட்டரில் ராதிகாவின் ரசிகர் (Rose Ni Fan Of Radhika Sarathkumar) ஒருவர், ” ஹாய் மாம். நான் தங்களின் மிகப்பெரிய ரசிகன். சித்தி 2 தொடரில் ரம்யா சாரதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் தொடர இருக்கிறாரா? தயவுசெய்து என் கேள்விக்கு பதிலளிக்கவும். ப்ளீஸ்” என்று கேள்வி கேட்டார்.
@realradikaa Hi mam. I am your biggest fan. Mam If ramya krishnam mam is going to continue as saradha in #chithi. Mam please answer for my question mam please.
— Rose Ni Fan Of Radhika Sarathkumar (@ni_radhika) February 25, 2021
இதற்கு ராதிகா, ” இல்லை தவறான பதில்” என்று பதிலளித்தார்.
Wrong news https://t.co/2wuCdx3h2f
— Radikaa Sarathkumar (@realradikaa) February 26, 2021
சாரதா என்ற நடுத்தர குடுமத்தை சேர்த்த பெண் தனது குடும்ப சந்தோசத்தை நிலைநாட்ட அவள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த தொடரின் கதை நகர்கின்றது.
முன்னதாக, சித்தி 2 தொடரில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். சீரியலில் இருந்து விலகுவது தொடர்பாக மூன்று காரணங்களையும் ராதிகா பகிர்ந்து கொண்டார்.
முதலாவதாக, கொரோனா பெருந்தொற்று காரணமாக ‘ராடான் மீடியாவொர்க்ஸ்’ நிறுவனம் நிறைய பாதிப்புகளை சந்தித்தது. அந்நிறுவனத்தை மீண்டும் சீராக கொண்டு வரவேண்டும்;
இரண்டாவதாக, சமத்துவ மக்கள் கட்சியில் முதன்மை துணைப் பொதுச் செயலாளராக பணியாற்றயுல்ளேன். சிறிது காலத்துக்குக் கட்சிப் பணியில் (சமூகப் பணி ) முழு நேரமும் ஈடுபட வேண்டும்;
மூன்றாவதாக, தொலைக்காட்சி என்ற வட்டத்தை தாண்டி வெளியே செல்ல வேண்டும். வாணி ராணி தொடருக்குப் பின் கதாபாத்திரத்தில் விருப்பம் இல்லாது போய் விட்டது. திரைப்படங்களிலும், வெப் சீரியஸ்கலயமும் நல்ல கதாபாத்திரங்கள் பண்ணக்கூடுய வாய்ப்பு வருகிறது. எனவே, அதில அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன்” என்று ராதிகா இன்ஸ்டகிராமில் ராதிகா தெரிவித்தார்.