Advertisment

சீரியலுக்கு ராதிகா குட் பை: ஒன்றல்ல, இரண்டல்ல, 3 காரணங்கள்!

Chitti 2 Actress Radhika News: வாணி ராணி தொடருக்குப் பின் கதாபாத்திரத்தில் விருப்பம் இல்லாது போய் விட்டது

author-image
WebDesk
Feb 16, 2021 17:41 IST
சீரியலுக்கு ராதிகா குட் பை: ஒன்றல்ல, இரண்டல்ல, 3 காரணங்கள்!

Chitti 2 Actress Radhika News: சித்தி 2 தொடரில் இருந்து விலகுவதற்கான காரணங்களை ராதிகா இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வீடியோவில் மூன்று  காரணங்களையும் அவர்  முனவைத்தார்.

Advertisment

முதலாவதாக, கொரோனா பெருந்தொற்று காரணமாக 'ராடான் மீடியாவொர்க்ஸ்' நிறுவனம் நிறைய பாதிப்புகளை சந்தித்தது. அந்நிறுவனத்தை மீண்டும் சீராக கொண்டு வரவேண்டும்;

இரண்டாவதாக, சமத்துவ மக்கள் கட்சியில் முதன்மை துணைப் பொதுச் செயலாளராக பணியாற்றயுல்ளேன். சிறிது காலத்துக்குக் கட்சிப் பணியில் (சமூகப் பணி ) முழு நேரமும் ஈடுபட வேண்டும்;

 

 

மூன்றாவதாக, தொலைக்காட்சி என்ற வட்டத்தை தாண்டி வெளியே செல்ல வேண்டும். வாணி ராணி தொடருக்குப் பின் கதாபாத்திரத்தில் விருப்பம் இல்லாது போய் விட்டது. திரைப்படங்களிலும், வெப் சீரியஸ்கலயமும் நல்ல கதாபாத்திரங்கள் பண்ணக்கூடுய வாய்ப்பு வருகிறது. எனவே, அதில அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன். உங்கள் அன்புக்கு நன்றி! நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் என்று ராதிகா தெரிவித்தார்.

1980-களில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகியாக இருந்த நடிகை ராதிகா 1999-க்கு பிறகு சீரியலில் நடிக்க தொடங்கினார். சினிமா போன்று சின்னத்திரையிலும் பெரும் வரவேற்பை பெற்ற ராதிகா சன்டிவியில் கடந்த 1999- முதல் 2001-வரை ஒளிபரப்பான சித்தி தொடரின் மூலம் உலகப் புகழ் பெற்றார்.

 

 

இதனைத் தொடர்ந்து, சன்டியில் ஒளிபரப்பான அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே போன்ற தொடகளில் நடித்த நடிகை ராதிகா, 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை வாணி ராணி சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தினார். கடந்த ஆண்டு சித்தி தொடரின் இரணடாவது பாகத்தை தயாரித்து நடிக்க தொடங்கினார். இந்நிலையில், சித்தி 2 தொடரில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment