/tamil-ie/media/media_files/uploads/2020/12/What-is-the-reason-behind-VJ-Chithra-Suicide.jpg)
chitra pandian stores mullai vj chitra
chitra pandian stores mullai vj chitra : நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் IPC 306-இன் படி கைது செய்யப்பட்டு பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பான வழக்கில், போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது சித்ராவை தற்கொலைக்குத் தூண்டிய புகாரில், அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனியார் ஹோட்டலில் சித்ராவுடன் தங்கியிருந்த அவரது கணவர் ஹேமநாத், அவருடன் நடித்த நடிகர்கள் அனைவரிடமும் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.
சித்ராவுக்கும் - ஹேம்நாத்துக்கும் திருமணம் நிச்சயம் நடந்த நிலையில் அடுத்த மாதம் தான் திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தனர். ஆனால் அவர்கள் கடந்த அக்டோபர் மாதமே பதிவு திருமணம் செய்து இருப்பதாக ஹேம்நாத் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த பின்னர் சித்ராவின் தாயாருக்கு ஹேம்நாத்தை பிடிக்கவில்லை என்றும், இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது.இதன் காரணமாகவே சித்ராவும் ஹேம்நாத்தும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல் வெளியானது.
சித்ரா தற்கொலை சம்பவம் தொடர்பாக, சித்ராவின் குடும்பத்தார் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். அதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 6 நாட்களாக, சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், தனது மகள் சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத்தான் காரணமென சித்ராவின் தாயார் விஜயா குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ராவுடன் ஹேம்நாத் சண்டையிட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் IPC 306-இன் படி கைது செய்யப்பட்டு பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.