/tamil-ie/media/media_files/uploads/2019/07/Chiyaan-Vikram-58.jpg)
Chiyaan Vikram 58
அருள்நிதி நடிப்பில் ‘டிமாண்டி காலனி’, நயன்தாரா நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ ஆகியப் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து அடுத்ததாக விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் வையகாம் 18 ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.
தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் இது, விக்ரம் நடிக்கும் 58-வது படம். 2020 கோடை விடுமுறைக்கு வெளியாகும் இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் இதர டெக்னீஷயன்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Super Duper excited to have the musical genius @arrahman sir on board❤️❤️ Dreams do come true???????????? #ChiyaanVikram58#ChiyaanVikram@Lalit_SevenScr @AndhareAjit @iamarunviswa@proyuvraaj@LokeshJey @sooriaruna pic.twitter.com/QfseE3Bm3s
— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) 13 July 2019
இந்நிலையில், இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருப்பதாக, அஜய் அவரது ட்விட்டரில் அறிவித்துள்ளார். ”கனவு நினைவாகிவிட்டது, மியூஸிக்கல் ஜீனியஸுடன் பணியாற்ற மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன்” என்பதையும் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார் அஜய்.
’ஐ’ படத்திற்கு பிறகு மீண்டும் விக்ரமும் - ரஹ்மானும் இணைவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் ரசிகர்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.