scorecardresearch

Kadaram Kondan: எக்ஸ்க்ளூஸிவ் டார்ச் லைட் ஃபைட் சீனின் மேக்கிங் வீடியோ!

Kadaram Kondan: இது விக்ரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Kadaram Kondan: எக்ஸ்க்ளூஸிவ் டார்ச் லைட் ஃபைட் சீனின் மேக்கிங் வீடியோ!
கடாரம் கொண்டான்

Chiyaan Vikram’s Kadaram Kondan: நடிகர் கமல்ஹாசன் நடித்திருந்த ‘தூங்காவனம்’ படத்தை இயக்கியவர் இயக்குனர் ராஜேஷ் எம் செல்வா. இவர் கமலின் உதவியாளரும் கூட. தற்போது இவர் நடிகர் விக்ரமை வைத்து ’கடாரம் கொண்டான்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

கடாரம் கொண்டான்: கமல்ஹாசன்-விக்ரம் கூட்டணியின் முதல் படம்

இந்தப் படத்தை கமலில் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விக்ரமுடன் இணைந்து கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன், நாசரின் மகன் அபி ஹாசன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு, பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். படத்திற்கு இசை ஜிப்ரன். இதனை ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

நாளை ’கடாரம் கொண்டான்’ படம் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது  இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் டார்ச் லைட் ஃபைட் சீனின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தினர். இது விக்ரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Chiyaan vikram kadaram kondan rajesh m selva kamal haasan