Advertisment

KK Trailer: பல வருடங்கள் கழித்து மிரட்டியிருக்கும் விக்ரம்! 'கடாரம் கொண்டான்' டிரைலர் இதோ!

’ஐ’ படத்திற்குப் பிறகு விக்ரம் நடித்தப் படங்கள் விமர்சன ரீதியிலும், கமர்ஷியலாகவும் பெரிதாக வரவேற்புப் பெறவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kadaram kondan full movie download, kadaram kondan tamilrockers, கடாரம் கொண்டான், kadaram kondan full movie

Kadaram Kondan

Kadaram Kaondan Trailer: ’சாமி ஸ்கொயர்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் டிரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து இதனைத் தயாரிக்கின்றன. முக்கிய வேடத்தில் அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார்.

Advertisment

கமல் நடித்த ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா, கடாரம் கொண்டான் படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு சீனிவாச ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வருடம் நவம்பரிலும், டீசர் ஜனவரியிலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து கடாரம் கொண்டான் படத்தின் ட்ரைலர் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகியுள்ளது. மிக ஸ்டைலிஷான லுக்கில் தோன்றும் விக்ரம், ஒவ்வொரு ஃபிரேமிலும் தனது ஆளுமையை செலுத்தி இருக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு, விக்ரம் படத்தின் டிரைலர் வேற லெவலில் இருந்தது என்று சொன்னால், அது மிகையல்ல.

'கடாரம் கொண்டான்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்துவிட்ட நிலையில், ஜூலை 19-ம் தேதி இப்படம் திரைக்குவர தயாராகியிருக்கிறது.

Kamal Haasan Chiyaan Akshara Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment