சாக்லெட் பாய் மாதவன் ஒரு விஞ்ஞானி என்று சொன்னால் நம்புவீர்களா?

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் நடிகர் மாதவன் விஞ்ஞானியாக நடிக்கவுள்ளார்.

2016ம் ஆண்டு இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் மெகா கம் பேக் கொடுத்த மாதவன், கடந்த ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தில் அனைவரின் கவனத்தையும் தன்வசமாக்கினார். இதையடுத்து தமிழில் ‘மாறா’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் மாதவன் இந்தியில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘ஜீரோ’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் மாதவன். ஆக்ஸர் மற்றும் தில் மாங்கே மோர் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த மகாதேவன் இப்படத்தை இயக்குகிறார்.

nambi narayanan

விஞ்ஞானி நம்னி நாராயணன்

நம்பி நாராயணன் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்களில் (cryogenic engine technology) முதன்மையானவராகச் செயல்பட்டவர். 1994ம் ஆண்டு பாதுகாப்பு ரகசியங்களை உளவுபார்த்ததாக மத்திய புலனாய்வுத்துறை தவறுதலாக இவரை கைது செய்தது. 1998ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவரை நிரபராதி என்று தீப்பளித்து விடுவித்தது. இந்த வழக்கால் அவர் அடைந்த மன உளைச்சல்களையும், பாதிப்புகளை ‘Ready to fire: How India and I survived the ISRO spy case’ என்ற புத்தகத்தில் நாராயணன் பதிவுசெய்துள்ளார். இந்தப் புத்தகத்தை தழுவி உருவாகும் இந்தப் படத்தில் மாதவன் மூன்று கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளார்.

ஒரு கேரக்டரில் நடிக்கும்போதே மாதவனுக்குக் குவியும் பாராட்டுகள் மற்றும் ரசிகர்கள் எண்ணிக்கை பற்றி நாம் அறியாதது. தற்போது ஒரே படத்தில் 3 கேரக்டரில் நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close