Darbar first Single Release : நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில், ஆதித்யா அருணாசலம் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தர்பார் படத்தில் ரஜினி டப்பிங் பேசும் படங்கள் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியாகின. அதோடு தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு ‘சும்மா கிழி’ என்ற முதல் சிங்கிள் ட்ராக் பாடல் இன்று வெளியாவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Live Blog
Darbar first single Chummakizhi release
தர்பார் படத்தின் முதல் பாடலான ‘சும்மாகிழி’ பாடல் வெளியீடு தொடர்பான தகவல்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருக்கும், நிவேதா ஜோசப், சும்மா கிழி பாடலை தனது ட்விட்
ர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தியேட்டரில் சும்மா கிழி பாடலுக்கு ஒரு ஸ்டெப் போட்டு விட்டு, அடுத்த ஸ்டெப் போடுவதற்குள் அந்த பீட் போய்விடுமே. என்னா ஸ்பீடு, பாடல் காட்சிகளைப் பார்க்க ஆவலாக உள்ளது என விஷ்வா எனும் ரசிகர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சும்மா கிழி லிரிக் வீடியோவில் இடம்பெறும் ரஜினி
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சும்மா கிழி’ பாடலை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அனிருத் இசையில், விவேக் எழுதி, ‘தர்பார்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘சும்மா கிழி’ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படாலின் துவக்கத்திலும், முடிவிலும் ரஜினி இடம்பெறும் ஷாட்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. பாடல் தொடங்குவதற்குன் முன்பு, ‘சும்மா கிழி’ என்று தொடங்கி வைக்கும் ரஜினி, இறுதியில் அதே வார்த்தையைக் கூறி முடித்தும் வைக்கிறார்.
வெளியானது தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சும்மா கிழி’ பாடல்
வெளியானது தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சும்மா கிழி’ பாடல்
இன்னும் சில நொடிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து சும்மா கிழி பாடல் வெளியாகவிருக்கிறது.
20 வருடங்கள் கழித்து ரஜினியை போலீஸ் உடையில் காண்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர் ரசிகர்கள்
20 வருடங்கள் கழித்து ரஜினியை போலீஸ் உடையில் காண்பதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர் ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் காம்போவிற்கு வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்.
சும்மா கிழி பாடல் ரிலீஸான அடுத்த 24 மணி நேரத்துக்குள் 10 மில்லியன் பார்வையும், 1 மில்லியன் லைக்கும் பெற வேண்டுமென ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.
சும்மா கிழி பாடல் வெளியாவதையொட்டி, கொண்டாட்ட மனநிலைக்கு மாறியிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள், அதோடு, சில ஃபேன் மேட் போஸ்டர்களையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்கள்.
சும்மா கிழி பாடலாசிரியர் விவேக், அந்தப் பாடலின் சில வரிகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
எத்தனை வருடங்கள் ஆனாலும், இவரின் எனெர்ஜி நம்மை இன்ஸ்பையர் செய்துக் கொண்டே இருக்கிறது. நன்றி எஸ்.பி.பி சார் என இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.