தமிழ் சினிமாவில் தற்போது வில்லன் வேடம் ஏற்று நடித்து வரும் நடிகர் வினய், தான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியாக உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் நடிகரான அறிமுகமானவர் வினய். முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், தொடர்ந்து ஜெயம் கொண்டான் மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதில் குரு, ஆயிரத்தில் இருவர் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். இதில் ஜீவா சந்தானம் ஆகியோருடன் இணைந்து என்றென்றும் புன்னகை படத்தில் நடித்திருந்தார்.
ஒரு கட்டத்தில் இவரின் படங்கள் வசூலை குவிக்க தவறியதால், கடந்த 2017-ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான மிஷ்னின் துப்பறிவாளன் படத்தில் வில்லனாக நடித்தார். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்திலும், சமீபத்தில் சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் வினய் நடிப்பில் தற்போது ஓ மை டாக் படம் தயாராகி வருகிறது இந்நிலையில் நடிகர் வினய் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சேரன் நடிப்பில் வெளியான ராமன் தேடிய சீதை படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்த விமலாரமனை தான் வினய் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் பிறந்தவரான விமலா ராமன், இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பொய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் ராமன் தேடிய சீதை படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த 2008-ம் ஆண்டு வெளியானது . அதன்பிறகு சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சுந்தர்.சி நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான இருட்டு படத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையே மலையாளம் தெலுங்கு இந்தி மொழிகளில் நடித்து வந்த விமலா ராமன் தற்போது கிராண்ட்மா என்ற பெயரில் தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இவரும் நடிகர் வினயும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில், இருவரும் விடுமுறை நாட்களில் மாலத்தீவு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களில் பொழுதை கழித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும இணையத்தில் வெளியானது.
தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்துனொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil