Advertisment
Presenting Partner
Desktop GIF

மூளையில் 11 அறுவை சிகிச்சை… புற்றுநோயுடன் போராடிய சீரியல் நடிகை மரணம்!

நடிகை சரண்யா சசியின் மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர், மற்றும் நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்ட மலையாள சினிமா நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
film and tv serial Actress Sharanya Sasi dies, actress sharanya sasi passes away, malaiyalam actress sharanya sasi dies due to covid complications, நடிகை சரண்யா சசி மரணம், சினிமா தொலைக்காட்சி நடிகை சரண்யா சசி மரணம், பினராயி விஜயன் இரங்கல், மலையாள சினிமா நடிகை மரணம், actress sharanya sasi struggls against cancer, actress sharanya sasi affected by brain tumor, actress sharanya sasi overcomes, actress sharanya sasi death, pinarayi vijayan condolence

பிரபல மலையாள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை சரண்யா சசி ஏற்கெனவே புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 35.

Advertisment

பிரபல மலையாள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை சரண்யா சசி. அவருக்கு மே மாதம் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில வாரங்களுக்குப் பிறகு தொற்றில் இருந்து குணமடைந்தார். கொரோனாவில் இருந்து விடுபட்டாலும் நிமோனியா மற்றும் பிற சுவாசப் பிரச்சனைகள் காரணமாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த இரண்டு வாரங்களாக ஆபத்தான நிலையில் இருந்தார்.

நடிகை சரண்யா சசி 10 ஆண்டுகளாக புற்றுநோயை எதிர்த்துப் போராடி வந்தார். புற்றுநோயை எதிர்த்து உறுதியுடன் போராடிய அவரை பலரும் பாராட்டினர்கள். சிகிச்சையின் போது, ​​அவருக்கு மூளையில் 11 பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. அதனால், அவர் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மட்டுமல்லாமல் பண ரீதியாகவும் பலவீனமடைந்தார்.

2012ம் ஆண்டு சரண்யாவுக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அது அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டாலும் மன வலிமையுடன் புற்றுநோயிலிருந்து தப்பியவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அவர் பிரகாசித்தார். பொது முடக்கத்தின் போது, ​​அவர் தனது சமையல் திறமையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கினார்.

நடிகை சரண்யா சசி முதன்முதலில் 2006ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். மோகன்லால் நடித்த சோட்டா மும்பை, பிருத்விராஜின் தளப்பாவு, கலாபவன் மணியின் சாக்கோ ரந்தாமன் போன்ற படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் பச்சை என்கிற காத்து என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் அவர் மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். இது மட்டுமல்லாமல் அவர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.

நடிகை சரண்யா சசியின் மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர், மற்றும் நடிகை மஞ்சு வாரியர் உள்ளிட்ட மலையாள சினிமா நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், நடிகை சரண்யா சசி மறைவுக்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். “சரண்யா தன்னம்பிக்கையை விடாமல் அவர் புற்றுநோயுடன் நடத்திய போராட்டம் நமது சமூகத்திற்கு உத்வேகத்தையும் நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. கேரளாவில் பருவமழை தொடர்பான பாதிப்புகள் ஏற்பட்டபோது, ​​சரண்யா தனது சமூக அர்ப்பணிப்பையும் மற்றவர்கள் மீது தனது அக்கறையையும் காட்டினார். அவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் துக்கத்தில் நானும் கலந்து கொள்கிறேன்.” என்று பினராயி விஜயன் தெரிவித்துளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சஷி தரூர், நடிகை சரண்யா சசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “பிரபல மலையாள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகை சரண்யா சசி தனது 35வது வயதில் கோவிட் பிரச்னைகளால் திருவனந்தபுரத்தில் காலமானார். புற்றுநோய்க்கு எதிரான அவரது துணிச்சலான போராட்டத்தை கோவிட் பிரச்னைகள் வீழ்த்தியுள்ளது. இந்த தைரியமான பெண்ணின் குடும்பத்தின் துயரத்தில் மில்லியன் கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் கலந்து கொள்கிறேன், அவருடைய தாராள மனப்பான்மை மற்றும் தைரியம் புகழ்பெற்றது.” சஷி தரூர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல, நடிகை மஞ்சு வாரியர் நடிகை சரண்யா சசி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அவர் “சரண்யா சசியின் குடும்பத்தினருக்கு இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Malayalam Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment