Advertisment

கவிஞர் சினேகனுக்கு மனைவி கன்னிகா கொடுத்த பிறந்த நாள் பரிசு என்ன பாருங்க? வைரல் வீடியோ!

கவிஞர் சினேகனின் பிறந்த நாளில் அவருடைய மனைவி கன்னிகா பிறந்தநாள் பரிசு கொடுத்த வீடியோ இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
snekan

கவிஞர் சினேகனின் பிறந்த நாளில் அவருடைய மனைவி கன்னிகா வித்தியாசமாக புட் மசாஜரை பிறந்தநாள் பரிசாகக் கொடுத்திருப்பது சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறியப்பட்டவர் சினேகன், இவர் பாடலாசிரியராக மட்டுமல்லாமல், கவிஞர், நடிகர், அரசியல்வாதி, பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். கவிஞர் சினேகன் ஜூன் 23-ம் தேதி தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

Advertisment

தமிழ் சினிமாவில் பல பிரபலமான வெற்றிப் பாடல்களை எழுதிய சினேகன், பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். இவர் பிக் பாஸ் சீசன் 1-ல் சினேகன் ரன்னர் அப் ஆக 2வது இடத்தைப் பிடித்தார்.

இதையடுத்து, இதையடுத்து, கவிஞர் சினேகன், இயக்குநர் அமீர் நடித்துள்ள யோகி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, உயர்திரு 420 திரைப்படத்திலும் கதாநாயகனாக அவதாரமெடுத்தார். 

இப்படியே நின்றுவிடாமல், கவிஞர் சினேகன் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அரசியல்வாதியானார். 2019-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டார். 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

இப்படி பன்முகங்களைக் கொண்ட கவிஞர் சினேகன் ஜூன் 23-ம் தேதி தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், திரைத்துறையினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். 

snekan

அந்த வகையில், சினேகனின் மனைவி கன்னிகா கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி ஒரு வித்தியாசமான பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளார். 

இதுகுறித்து வெளியாகி உள்ள வீடியோவில் சினேகனை படுக்கை அறையில் இருந்து கன்னிகா அழைத்து வருகிறார். அங்கு வாங்கி வைத்திருந்த பரிசை திறந்து பார்க்க சொல்கிறார். இதை எடுத்து பார்த்ததும் சினேகன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். சினேகன் அவ்வளவு மகிழ்ச்சி அடையும் அளவுக்கு கன்னிகா என்ன பரிசு கொடுத்தார் என்று ஆவலாகப் பார்த்தால், ஒரு ஃபுட் மசாஜரை பரிசாகக் கொடுத்துள்ளார். இந்த பொருளின் விலை ரூ 5000 முதல் ரூ 6000 வரை இருக்கலாம் என தெரிகிறது. 

பொதுவாக பிறந்தநாள் என்றால், பயன்படுத்த முடியாத பரிசுப் பொருளாகக் கொடுப்பது உண்டு. இல்லையென்றல், சர்ட், பேன்ட், புடவை ஏதாவது ஒன்று தருவார்கள். ஆனால், ஒரு பரிசு பொருள் அவர் பயன்படுத்தக்கூடிய பொருளாக இருக்க வேண்டும். அந்த வகையில், கன்னிகா தனது கணவர் சினேகனுக்கு கால்களுக்கு மசாஜ் செய்யும் கருவியை பிறந்தநாள் பரிசாகக் கொடுத்திருக்கிறார்.

கவிஞர் சினேகனின் பிறந்த நாளில் அவருடைய மனைவி கன்னிகா வித்தியாசமாக புட் மசாஜரை பிறந்தநாள் பரிசாகக் கொடுத்திருப்பது சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. இதையடுத்து, சினேகனுக்கு கன்னிகா பிறந்தநாள் பரிசு கொடுத்த வீடியோ இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Snehan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment