scorecardresearch

கமல் படத்தை வெளியிடவுள்ள பிரபல தயாரிப்பு நிறுவனம்.. மாறுபட்ட வேடத்தில் பிரியா மணி.. மேலும் செய்திகள்

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹன்சிகா படத்தின் போஸ்டரை வெளியிட்ட ஆர்யா

நடிகர் ஆதி தற்போது அறிமுக இயக்குனர் மனோ தாமோதரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை ஹன்சிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆதிக்கு ஜோடியாக ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தில் நடித்த பாலக் லல்வானி நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ‘பாட்னர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த படத்தில் நடிகர் பாண்டியராஜன், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தில் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு ஆகியோர் கடத்தல்காரர்களாக நடிக்கின்றனர்.

விக்ரம் படத்தின் புதிய டைட்டில்

நடிகர் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருபவர். கடைசியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான் படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் அவரது மகன் துருவ் விக்ரமும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இருவரும் இந்தப் படத்தில் தந்தை-மகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், இவர் காலா, கபாலி உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அந்தப் படத்தின் டைட்டில் மைதானம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரியா மணி, சன்னி லியோன் இணைந்து நடிக்கும் புதிய படம்

பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருது வென்ற பிரியா மணி, சில படங்களுக்கு பிறகு காணாமல் போனார். அதன்பிறகு, கன்னடத்திலும் தெலுங்கில் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில் ஹிந்தி இணையத் தொடரான தி ஃபேமிலி மேனில் நடித்தார்.

அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தற்போது அவர் கொட்டேஷன் கேங் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை விவேக் இயக்குகிறார். பிகில் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய ஜாக்கி ஷெராஃபும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், ஹிந்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் இப்படத்தை வெளியிட படக் குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கவர்ச்சிக்கு அஞ்சாத சன்னி லியோனும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

கமல் படத்தின் புதிய அப்டேட்

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘விக்ரம்’.

கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படத்தின் புதிய அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

பாரதியை யோசிக்க வைத்த லட்சுமி… உண்மை தெரிந்துவிடுமோ…!

அதன்படி, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து ‘விக்ரம்’ திரைப்படத்தை தமிழ்நாடு தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cinema news cinema roundup entertainment interesting news