scorecardresearch

தனுஷ் பட நடிகை கர்ப்பம்.. பீஸ்ட் பட ரிலீஸ் தேதி இதுதான்.. மேலும் செய்திகள்

தென்னிந்திய திரைப்படங்களில் தொடக்க காலத்தில் நடிக்கும்போது எனது உடல் எடையை சரியாக பராமரிக்கவில்லை. இதனால், என்னை உருவ கேலி செய்திருக்கின்றனர்

தேசிய விருது வென்ற நடிகர் தனுஷ் உடன் ராஞ்சனா படத்தில் நடித்தவர் சோனம் கபூர். இவர், பிரபல பாலிவுட் நடிகரான அனில் கபூரின் மகள் ஆவார்.

உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்ட நீரஜா படத்தில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியவர் சோனம் கபூர். தான் ஏற்கும் கதாபாத்திரமாக மாறும் தன்மை கொண்ட இவர், கடந்த 2018-ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சோனம் கபூரின் உறவினர்களான கரீனா கபூர், குஷி கபூர், ஜான்வி கபூர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

உருவ கேலியை எதிர்கொண்ட நடிகை

அரண்மனை 3, இமைக்கா நொடிகள், அயோக்யா ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் ராசி கன்னா.
இவர் தெலுங்கு, ஹிந்தி திரையுலகிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.

31 வயதாகும் ராசி கன்னா டெல்லியைச் சேர்ந்தவர். ஹீரோ படத்தை இயக்கிய மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் சர்தார் படத்தில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், தென்னந்திய சினிமாவில் உருவ கேலியை எதிர்கொண்டதாக தெரிவித்தார்.

தென்னிந்திய திரைப்படங்களில் தொடக்க காலத்தில் நடிக்கும்போது எனது உடல் எடையை சரியாக பராமரிக்கவில்லை. இதனால், என்னை உருவ கேலி செய்திருக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

பீஸ்ட் ரிலீஸ் தேதி

நடிகர் விஜய் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியாகிய மாஸ்டர் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் அவருக்கு விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் விஜயின் அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசை அமைத்துள்ளார். பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் யூ-டியூப் தளத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப்ப பெற்றது.

படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சர்பிரைஸை தீர்க்கும் வகையில் ஏப்ரல் 13-ஆம் தேதி பீஸ்ட் படம் உலகமெங்கும் வெளியாகும் என்று சன் பிக்சர் நிறுவனம் டுவிட்டரில் அறிவித்துள்ளது.

வலிமை பட படத்தொகுப்பாளரின் அசத்தல் ட்வீட்
நடிகர் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த வலிமை திரைப்படம் கடந்த மாதம் 24ம் தேதி வெளியாகி இருந்தது.

வசூல் ரீதியாக படம் பெரிய சாதனை படைத்து வரும் இந்தப் படத்தை, எச் வினோத் இயக்கியிருந்தார்.
இப்படத்தில் ஹுமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா கும்மகொண்டா வில்லனாகவும் நடித்திருந்தனர்.

தேவதை வந்துவிட்டாள்… உக்ரைன் நடிகையை கொண்டாடும் சிவகார்த்திகேயன் டீம்!

இந்த திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 25-நாட்கள் நிறைவடைந்தது. இந்த நிலையில் படத்தின் 25-வது நாளில் அஜித்திற்கு நன்றி சொல்லி படத்தின் தொகுப்பாளர் விஜய் வேலுகுட்டி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது :
அஜித் அவர்களின் அர்ப்பணிப்பு , திறமை , கவனம் போன்ற அனைத்தையும் கண்டு நான் மிகவும் வியப்படைந்தேன்.படத்தின் சண்டை காட்சிகள் எவ்வாறு வந்திருக்கிறது என அஜித் அவர்கள் என்னிடம் கேட்டார் . அதற்கு நான் இது போன்ற காட்சியை இதுவரை பார்த்தது இல்லை என தெரிவித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cinema news entertainment stories interesting news in tamil