Advertisment

தமிழ் சீரியல் நடிகர் இந்திரகுமார் திடீர் மரணம்: போலீஸ் விசாரணை

serial actor Indira Kumar dies by suicide: சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை அவரது நண்பரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
Feb 20, 2021 11:51 IST
New Update
Cinema news in tamil serial actor Indira Kumar dies by suicide

Cinema news in tamil serial actor Indira Kumar dies by suicide

Cinema news in tamil: சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை அவரது நண்பரின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடந்த புதன் கிழமை அன்று நண்பருடன் திரையரங்கு சென்று படம் பார்த்து விட்டு வந்த இந்திர குமார், வேறு ஒரு நண்பரின் வீட்டில் தங்கி இருந்திருக்கிறார். இந்திர குமாரை தேடி அவரது நண்பர்கள் காலையில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது, சீலிங் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்திர குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளது. அதோடு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்து, சின்னத்திரையில் நடித்து வந்த சின்னத்திரை நடிகர் இந்திர குமார், படங்களில் நடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்காததாலும், அவரது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையாலும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகர் இந்திர குமாருக்கு சிறு வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

ஏற்கனவே சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது மிககுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சின்னத்திரை நடிகர் இந்திர குமாரின் மரணம், சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

#Sucide
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment