சித்தி 2 சீரியல் நிறுத்தமா? ‘சாரதா அம்மா’வே உண்மையை சொல்றாங்க!

Chiththi serial : ‘சித்தி’ சீரியல், ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று ‘செம ஹிட்’ அடித்திருந்தது

Cinema news in tamil sun tv chithi-2 serial will not be stopped says radhika sarathkumar

Cinema news in tamil: கடந்த 1999-ம் ஆண்டு சன் டிவி-யில், நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் ஒளிபரப்பான ‘சித்தி’ சீரியல், ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று ‘செம ஹிட்’ அடித்திருந்தது. சித்தி -2 எடுக்கப்போவதாக கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிப்புகள் வெளியாகின. அதன் படி சித்தி -2 சீரியலுக்கான படப்பிடிப்பும் தடபுடலாக நடைபெற்றது. சித்தி ஒன்றில் பல எபிசோடுகளை இயக்கி இருந்த இயக்குனர் சமுத்திரக்கனி சித்தி -2 வின் முதல் இரண்டு எபிசோடுகளை இயக்கி இருந்தார்.

சித்தி -2 ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலே கொரோனா பெருத்தொற்று பரவ ஆரம்பித்தது. ஆகவே படப்பிடிப்புகளை நிறுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதனால் சித்தி -2க்கு பதிலாக சித்தி – 1 டிவியில் ஒளிபரப்பாகியது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் படப்பிடிப்பை மீண்டும் துவங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கொரோனா தொற்றுக்கு பின் ஒளிபரப்பாகிய இந்த சீரியலில் சில கதாபாத்திரங்களை மாற்றம் செய்தனர். அதில் பொன்வண்ணன் கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவியும், நிகிலா ராவ் கேரக்டரில் காயத்ரி யுவராஜ், ஷில்பா நடித்திருந்த ரோலில் ஜெயலட்சுமியும் நடித்து வருகின்றனர். தற்போது ஒளிபரப்பாகும் புதிய எபிசோட்கள் ரசிகர்களின் மனம் கவரும் வகையில் அமைந்துள்ளது. சித்தி 2 சீரியலிலும் ராதிகா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது பற்றி நடிகை ராதிகா சரத்குமாரிடம் ரசிகர் ஒருவர் ட்விட்டர் வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு விடையளித்த ராதிகா, சித்தி 2 சீரியல் நிறுத்தப்பட போவதில்லை எனக் கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Web Title: Cinema news in tamil sun tv chithi 2 serial will not be stopped says radhika sarathkumar

Next Story
குடும்பமே எதிர்பார்த்த அந்த ஒரு தருணம்… பாரதி -கண்ணம்மா சேர்வார்களா?bharathikannamma vijay tv serial bharathi kannamma
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com