scorecardresearch

நிஜமா இது? தல அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவர்தானாம்!

Actor ajith movie update: வலிமை படத்தில் வரும் ‘பைக் ரேஸ்’ காட்சியை படம் பிடிக்க ஸ்பெயின் நாட்டிற்கு படக்குழு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. 

Cinema news in tamil Who’s gonna direct thala Ajith’s next movie #Thala61

Cinema news in tamil:  நடிகர் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் எச். வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் சில காட்சிகள் சென்னையில் படம் பிடிக்கப்பட்டது. தற்போது ஹைதராபாத்தில் அதன் படப்பிடிப்பு மிகத் தீவிரமாக  நடைபெற்று வருகிறது. அதோடு இந்த படத்தில் வரும்பைக் ரேஸ்காட்சியை படம் பிடிக்க ஸ்பெயின் நாட்டிற்கு படக்குழு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. 

வலிமை படத்திற்கு பிறகு நடிகர் அஜித், யாருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற கேள்வி அஜித்தின் ரசிகர்கள் இடையே பேசு பொருளாக இருந்து வருகிறது. இந்நிலையில் சூரைப்போற்று இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் அஜித்தை சந்தித்து கதை கூறியதாக கூறப்படுகிறது. அதோடு நடிகர் அஜித் நடித்த பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் நடிகர் அஜித்திடம் கதை கூறியதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் 14 வருடத்திற்கு முன்னர் நடிகர் அஜித்தை வைத்து இயக்கிய இயக்குனர் ஒருவரும் அஜித்திடம் கதை சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.   

கடந்த 2007ம் ஆண்டு நடிகர் அஜித் நடித்து வெளியான கிரீடம் படத்தின் இயக்குனர் எஎல்.விஜய், அஜித்தை சந்தித்து கதை கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் வலிமை திரைப்படத்தில் பிஸியாக இருப்பதால் இதுவரை எந்த இயக்குனருக்கும் கால்ஷீட் வழங்கியதாக தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அதோடு வலிமை படத்தை இயக்கி வரும் எச். வினோத்தின், படம் இயக்கும் பாணி நடிகர் அஜித்திற்கு பிடித்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே நடிகர் அஜித்தின் அடுத்த படம் இயக்கும் வாய்ப்பும் அவருக்கே கிடைக்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தொடர்ச்சியாக ஒரே இயக்குனருக்கு தனது கால்ஷீட்டை வழங்குவது நடிகர் அஜித்திற்கு இது புதிது கிடையாது. இதற்கு முன்னதாக நடிகர் ரஜினி நடித்து வரும் அண்ணாத்தே திரைப்படத்தை இயக்கி வரும்  இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய வீரம். வேதாளம், விவேகம் மற்றும் விசுவாசம் போன்ற திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடிக்க நடிகர் அஜித் கால்ஷீட் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cinema news in tamil whos gonna direct thala ajiths next movie thala61