scorecardresearch

டிரெண்டிங்கில் கே.ஜி.எஃப் பாடல்… விமர்சனத்தால் வருந்திய நடிகை.. மேலும் செய்திகள்

பாலிவுட் நடிகை யாமி கவுதம் நடிப்பில் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியானது தஸ்வி. இந்தப் படத்தில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்திருந்தார்

டிரெண்டிங்கில் கே.ஜி.எஃப் பாடல்… விமர்சனத்தால் வருந்திய நடிகை.. மேலும் செய்திகள்

கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘யாஷ்’ ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முதல் பாகம் மிகப் பெரிய வெற்றி அடைந்த நிலையில், கே.ஜி.எப் ‘2 ‘திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் முதல் பாடல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் 2வது பாடல், அகிலம் நீ என்று தொடங்கும் அம்மா பாடல் வெளியாகியிருக்கிறது.

நடிகை அலியா பட்டுக்கு விரைவில் திருமணம்? அவரது நண்பர் என்ன சொல்கிறார்…

நடிகை அலியா பட், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவருக்கும், நடிகர் ரண்பீர் கபூருக்கும் காதல் மலர்ந்தது. அவர்கள் இருவருக்கும் ஏப்ரல் 2ஆவது வாரத்தில் திருமணம் என்று பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால், இதுதொடர்பாக இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில், அலியா பட்டின் நண்பரும் நடிகருமான ஷாகித் கபூரிடம் செய்தியாளர்கள் இதுதொடர்பாக கேட்டனர்.
அதற்கு அவர் இது வெறும் வதந்திதான். அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருங்கள் என்று கூறினார்.

இன்ஸ்டாவில் கலக்கும் பிரியங்கா சோப்ரா

பாலிவுட் நடிகையாக இருந்து பின்னர் ஹாலிவுட்டில் தடம் பிதித்த நடிகை பிரியங்கா சோப்ரா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர். அவர், தற்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

அந்தப் புகைபப்டங்கள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் எடுக்கப்பட்டவை ஆகும்.
எப்போதும் கவர்ச்சியான உடைகளை அணியும் பிரியங்கா இந்த முறை சுடிதார் அணிந்து வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

இவரது புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகிறது. மஞ்சள் நிற சுடிதார் அணிந்து வித்தியாசமோன போஸ்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ..

நடிப்பை குறை கூறியதால் வருந்திய நடிகை

பாலிவுட் நடிகை யாமி கவுதம் நடிப்பில் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியானது தஸ்வி. இந்தப் படத்தில் அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யாமி கவுதம் நடித்திருந்தார். இந்தப் படத்தின் விமர்சனத்தை பிரபல பொழுதுபோக்கு தளம் எழுதியிருந்தது.

#BeastMode: வெறித்தனமான டிரெய்லர்.. ஹவுஸ்ஃபுல் ஆன தியேட்டர்ஸ்.. மரண வெயிட்டிங்கில் விஜய் ரசிகர்கள்!

அதில் யாமி கவுதம் சரியாக நடிக்கவில்லை என்பது போல் விமர்சனம் வந்திருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த யாமி கவுதம், என்னை பற்றி அந்த தளத்தில் இனி விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை எப்போதுமே ஏற்றுக் கொள்வேன்.

என்னை திரையுலகில் இருந்து வெளியேற வைக்கும் நோக்கில் எழுதப்படும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cinema news kollywood and bollywood interesting news