Advertisment

பா.ரஞ்சித் இயக்கும் இந்தி படம்.. சீன மொழியில் சிவகார்த்திகேயன் படம்.. மேலும் செய்திகள்

மன்மத லீலை திரைப்படத்தை முதலில் ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருந்த படக்குழு அதன் பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்தது.

author-image
WebDesk
New Update
பா.ரஞ்சித் இயக்கும் இந்தி படம்.. சீன மொழியில் சிவகார்த்திகேயன் படம்.. மேலும் செய்திகள்

நெஞ்சுக்கு நீதி படம் வெளியீடு எப்போது?

Advertisment

கனா படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார்.

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ‘ஆர்டிக்கிள் 15’ தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’யாக ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

வலிமை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 

இந்த திரைப்படத்தில் ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும்  நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மார்ச் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படக்குழு படத்தை வருகிற மே மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபடியும் ஒண்ணு கூடிட்டாங்கய்யா… ஜாலி டூர் கிளம்பிய பிரியங்கா கேங்!

இந்தி படத்தை இயக்கவுள்ள பா.ரஞ்சித்

இயக்குனர் ரஞ்சித் இந்தியில் திரைப்படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக உள்ள இந்த திரைப்படத்திற்கு 'பிர்சா' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

பிர்சா முண்டா 19-ம் நூற்றாண்டில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆங்கிலேயர்களிடமும் உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த, பழங்குடி மக்களுக்காகப் போராடியவர்.

இந்த படத்தை நமா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஷரீன் மந்திரி, கிஷோர் அரோரா ஆகியோர் தயாரிக்கின்றனர். 

சீன மொழியில் சிவகார்த்திகேயன் படம்!

பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்த திரைப்படம் 'கனா'.

அருண்ராஜா காமராஜ் கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

சிவகார்த்திகேயன் 'கனா' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.  

இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் தற்போது 'கனா' திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வருகிற மார்ச் மாதம் 18-ந்தேதி கனா திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளது.

அருண்ராஜா காமராஜ் தற்போது நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கி முடித்துள்ளார்.

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில்  நடிகர் விஜய் அஞ்சலி

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது நினைவிடத்தில் நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அவரது திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் இந்திய திரைபிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

புனித் ராஜ்குமாரின் உடல் காண்டீவராவில் உள்ள அவரது தந்தை சமாதிக்கு அருகில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் விஜய் புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘மன்மத லீலை’ பட ரிலீஸ் தேதி

இயக்குநர் வெங்கட் பிரபுவின் மன்மத லீலை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படம் நேரடியாக திரையரங்குகளில் தான் வெளியாகவுள்ளது.

வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படமான இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்மிருதி வெங்கட், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உள்ளிட் நடிகைகள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் தவிர வேறு எதும் இல்லையா? ரோஜா பரிதாபம்

இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மணிவண்ணன் எழுதியுள்ளார்.

மன்மத லீலை திரைப்படத்தை முதலில் ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருந்த படக்குழு அதன் பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி மன்மத லீலை திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment