scorecardresearch

மறுபடியும் ஒண்ணு கூடிட்டாங்கய்யா… ஜாலி டூர் கிளம்பிய பிரியங்கா கேங்!

Tamil Biggboss Priyanka : பிக்பாஸ் போட்டியாளர் பிரியங்கா தனது யூடியூப் சேனலில், ஒரு டிராவல் விலோக் என்ற பெயரில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மறுபடியும் ஒண்ணு கூடிட்டாங்கய்யா… ஜாலி டூர் கிளம்பிய பிரியங்கா கேங்!

Biggboss Priyanka Viral Video Travel Vlog : சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5-ல் பங்கேற்ற விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியான பிரியங்கா மீண்டும் தனது பிக்பாஸ் நண்பர்களுடன் ஒரு இனிய பயணத்தை தொடங்கியுள்ளார்.இது தொடர்பான வீடியோ பதிவை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன், கடந்த ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி தொடங்கி சமீபத்தில் நிறைடைந்தது. இந்நிகழ்ச்சியில் விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்கா கடைசிவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து 2-வது இடம் பிடித்தார். நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய அவர், மீண்டும் விஜய் டிவியில் தனது தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், தற்போது பிரியங்கா தனது பிக்பாஸ் நண்பர்களாக மதுமிதா, அபிஷேக் ராஜா, பாவனிரெட்டி ஆகியோருடன் ஹைதராபாத்க்கு ஒரு பயணத்தை தொடங்கியுள்ளார். தனது யூடியூப் சேனலில், ஒரு டிராவல் விலோக் என்ற பெயரில் வீடியோவை வெளியிட்டுள்ள அவர், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் அங்கு இருப்பது போன்ற உணர்வுடன்தான் இருக்கிறது. இது எப்போது முடியும் என்று தெரியவில்லை. இது சரியாகத்தான் நீங்கள் இருக்கிறீகள் ஐ யம் பேக் என்று கூறியுள்ளார்.  

வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேனு சொல்லு எப்படி போனேனோ அதைவிட கும்முனு நச்சினு என்று சொல்ல அதற்குள் போன் வந்துவிட்டது என்று சொல்கிறார். அதன்பிறகு சம்போ சிவ சம்போ பாடல் பாடிக்கொண்டே காரில் போகும் பிரியங்கா சென்னை விமான நிலையத்தை அடைகிறார். இங்கு ப்ளைட் மிஸ் பண்ணல என்னோ 3 செல்லக்குட்டிகளையும் மிஸ் பண்ணல என்று சொல்லும்போது பவானி ரெட்டி, மதுமிதா, அபிஷேக் ராஜா ஆகியோர் வீடியோவில் வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் இணைந்து ஹைதராபாத்தில் ஊர் சுற்றிப்பார்க்க செல்வதாக சொல்கின்றனர். அதன்பிறகு வீடியோவில் ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்ள, ஹைதராபாத்தை சேர்ந்த பவானி ரெட்டி இவர்களுக்கு ஊர் சுற்றி காண்பிக்க உள்ளதாக சொல்கிறார் அவர் எங்கெல்லாம் கூட்டிச் செல்ல போகிறார் என்பதையும்தெளிவாக கூறியுள்ளார். அதன்பிறகு ஜாலியாக இருந்துவிட்டு அனைவரும் ஹைதராபாத் செல்கின்றனர்.

அங்கு முதலில், ஷா ஹோஸ் என்ற பிரபலமான ஹோட்டலில் பிரியாகி சாப்பிட செல்கினறனர். அதன்பிறகு ஹைதராபாத்தின் பிரபலமான சுற்றுலா தளமான ஷில்பாராமமிற்கு வருகின்னர். அங்கு ஷாப்பிங் பொம்மலாட்டம் என ஜாலியாக என்ஜாய் பண்ணிவிட்டு அடுத்த இத்திற்கு செல்கினறனர் அதன்பிறகு அடுத்து எங்கெல்லாம் சென்றோம், என்ன செய்தோம் என்பது இந்த வீடியோவின்பார்ட் 2 விரைவில் என்பதுடன் வீடியோ முடிவடைகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijayvt vj priyanka travel vlog video with biggboss contestants

Best of Express