scorecardresearch

பா.ரஞ்சித் தயாரித்த படத்தின் டிரைலர்.. புனித் ராஜ்குமார் பட ரிலீஸ் தேதி.. மேலும் செய்திகள்  

ஆக்ஷன் படமான ஜேம்ஸ் திரைப்படத்தை புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் பட பாடல் சாதனை

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

அனிருத் இசையமைத்துள்ள நிலையில் இப்படத்தின் முதல் பாடலாக அரபிக் குத்து அண்மையில் வெளியிடப்பட்டது. மிகப் பெரிய வரவேற்பையும் பெற்றது.

இந்நிலையில் அரபிக் குத்து பாடல் யூடியூப் தளத்தில் இதுவரை 15 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

படத்தின் ஆடியோ ரிலீஸ் வருகிற 20ஆம் தேதி நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 

வெளியானது குதிரை வால் டிரைலர்

மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷியாம் சுந்தர் இயக்கத்தில் நடிகர் கலையரசன் நடித்துள்ள திரைப்படம் ‘குதிரை வால்’. இந்த திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. 

இந்த திரைப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

குதிரை வால் திரைப்படம் மார்ச் 18-ந்தேதி வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

டிரைலரை பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர். டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

நடிகர் சூர்யா வீட்டிற்கு போலீஸார் பாதுகாப்பு

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி சென்னை தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யா வசிக்கும் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சூர்யா நடித்து தற்போது வெளிவந்துள்ள எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்திற்கும், பாமக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தை திரையிடக்கூடாது என்று சில மாவட்டங்களில் தியேட்டர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து நீட்டிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இயக்குநர் இயக்கத்தில் தயாராகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பிரபாஸ் படத்தில் முன்னணி மலையாள நடிகர்

நடிகர் பிரபாஸ் நடிப்பில் ராதே ஷ்யாம் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் அவர் கைரேகை நிபுணராக நடித்துள்ளார்.

பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பூஜா ஹெக்டே இந்தப் படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார்.

படம் உலகமெங்கும் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

பாகுபலிக்கு பிறகு சாஹோ படத்தில் நடித்திருந்தார் பிரபாஸ். எனினும், அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ராதே ஷ்யாம் படத்தை பெரிதும் நம்பியிருக்கும் பிரபாஸ், அடுத்ததாக சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். கன்னடத்தில் எடுக்கப்பட்ட கேஜிஎஃப் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

சலார் படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்பட 5 மொழிகளில் உருவாகி வருகிறது. மலையாளத்தில் முன்னணி நடிகரான பிருத்விராஜ் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொல்றதுக்கு வேற எதுமே இல்லையா? ட்ரெண்டிங்கை மாத்துங்க கோபி சார்…!

விரைவில் புனித் ராஜ்குமாரின் படம்!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் இறப்பதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தார். அதில் ஒரு படம் ஜேம்ஸ். இந்தப் படம் அவரது பிறந்த நாளான மார்ச் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை சேத்தன் குமார் இயக்கியுள்ளார். சரண் ராஜ் இசை அமைத்துள்ளார். பிரியா ஆனந்த், அனு பிரபாகர், முகேஷ் ரிஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆக்ஷன் படமான ஜேம்ஸ் படத்தை புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 4,000 திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cinema news round up entertainment stories pa ranjith