scorecardresearch

இன்ஸ்டாவில் அதிகம் பின்தொடரப்படும் நடிகர்.. பிரபல இயக்குநரை புகழ்ந்த ஏ.ஆர்.ரகுமான்.. மேலும் செய்திகள்

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீதான ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது

தென்னிந்திய கதாநாயகர்களை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் அடிப்படையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் முதலிடத்தில் உள்ளார்.

தென்னிந்திய திரை நாயகர்களை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் ஐந்து இடத்தில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அதில் அல்லு அர்ஜுன் முதல் இடத்தில் உள்ளார். இன்ஸ்டாகிராமில் அவரை 17.5 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

2-ஆவது இடத்தில் விஜய் தேவரகொண்டா உள்ளார்.. இவரை இன்ஸ்டாகிராமில் 14.7 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

மூன்றாம் இடத்தில் கேரளாவை சேர்ந்த துல்கர் சல்மானை 10.1 மில்லியன் பேர்
பின் தொடர்கின்றனர். நான்காம் இடத்தில் இருப்பவர் பிரபாஸ். இவரை இன்ஸ்டாகிராமில் 8.1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

இந்த வரிசையில் ஐந்தாம் இடத்தில் இருப்பவர் மகேஷ் பாபு. இவர் ஸ்பைடர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராமில் இவரை 8 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.
தமிழ் நடிகர்களில் சிம்பு மட்டுமே இன்ஸ்டாகிராமில் அதிக பின் தொடர்பவர்களை கொண்டுள்ளார். அவரை 6.6 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

ரஜினியைப் புகழ்ந்த இசைஞானி!

இளையராஜாவின் இசைக்கச்சேரி ராக் வித் ராஜா என்ற பெயரில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. பதினைந்தாயிரம் பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், காவல்துறையை சேர்ந்த உயரதிகாரிகள் பலரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். தனுஷ், கங்கை அமரன் உட்பட திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் எஸ்.பி.பி, லதா மங்கேஷ்கருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் இளையராஜா பேசியதாவது:-
என் பால்ய சினேகிதன் பாலு இந்த நேரத்தில் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. அநியாயமாக கொரோனாவால் இறந்து விட்டார். வள்ளி படத்தில் இடம் பெற்ற என்னுள்ளே பாடலைக்கேட்டுக் கைதட்டினீர்கள். அந்த பாடல் அவ்வளவு அழகாக இருக்கக் காரணம் ரஜினிகாந்த் என்னிடம் கதையை அப்படி அழகாக விளக்கினார். அவரை ஒரு நடிகராக நான் பார்த்திருக்கிறேன். அவருக்குள் ஒரு சிறந்த திரைக்கதையாசிரியர் இருந்ததை நான் அன்றுதான் பார்த்தேன். நல்ல கதாசிரியர் ரஜினி என்றார் அவர்.

பார்த்திபனின் புதிய பட மோஷன் போஸ்டர்!

இயக்குனர் பார்த்திபனின், ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பார்த்திபன், ‘இரவின் நிழல்’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீதான ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது

இந்நிலையில் ‘இரவின் நிழல்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது .இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ,கொண்ட சிறப்பு வீடியோ வெளியாகியிருக்கிறது.

இந்த வீடியோவில் பார்த்திபனை மிகவும் சிறந்த கலைஞர் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் புகழ்ந்துள்ளார்.

இந்தப் படம்தான் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் சினிமா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தப் படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆரம்ப கால திரையுலக பயணத்தை பகிர்ந்து பாலிவுட் நடிகை

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் வித்யாபாலன். தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்குமார் ஜோடியாக நடித்தார். மறைந்த நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையான தி டர்ட்டி பிக்சர் என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

இவர் திரையுலகில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பிரபாத் கபர் என்ற இந்தி நாளிதழுக்கு சமீபத்தில் அளித்த புதிய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

தான் நடிக்க வந்த புதிதில் நடந்த சம்பவங்களை என்னால் மறக்கவே முடியாது. 13 படங்களில் இருந்து நான் நீக்கப்பட்டேன்.

நடிகர் சங்கத் தேர்தல்: துணைத் தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தம் – ஐசரி கணேஷ் புகார்

அதில் ஒரு படத்தில் நடிப்பதில் இருந்து தயாரிப்பாளர் என்னை நீக்கி விட்டு, என்னிடம் நடந்து கொண்ட விதம் மறக்க முடியாதது என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cinema news roundup ar rahman praises famous director of tamil industry