scorecardresearch

சுதா கொங்கரா படத்தில் சூர்யா..? சிம்பு பாடிய தெலுங்கு பாடல்.. மேலும் செய்திகள்

இந்தப் பாடல் யூ-டியூப் தளத்தில் ஹிட்டடித்துள்ளது. இளைஞர்களின் உதடுகளை முணுமுணுக்க வைக்கும் பாடலாகி இருக்கிறது.

சுதா கொங்கரா படத்தில் சூர்யா..? சிம்பு பாடிய தெலுங்கு பாடல்.. மேலும் செய்திகள்

ஹேம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் புதிய படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

சூர்யா நடிப்பில் ‘சூரரைப்போற்று’ படத்தை இவர் இயக்கினார். இந்த படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தியில் இதன் ‘ரீமேக்’ படத்தை தற்போது அவர் இயக்கி வருகிறார். அதைத்தொடர்ந்து தமிழில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் சூர்யா இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புகையிலை விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்-பிரபல நடிகர்

சமீபத்தில் அல்லு அர்ஜூனை ஒரு முன்னணி புகையிலை நிறுவனம் விளம்பரத்துக்காக அணுகியது.
அதற்கு எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இதுபோன்ற விளம்பர படங்களில் நடிக்கவே மாட்டேன் என்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘அந்த புகையிலை விளம்பர படத்தில் நடித்தால், நானே எனது ரசிகர்களை தவறான பாதைக்கு அழைத்துச்செல்வதுபோல் ஆகிவிடும். எனவேதான் நடிக்க மறுத்துவிட்டேன். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இதுபோன்ற விளம்பர படங்களில் நடிக்கவே மாட்டேன்’’, என்றார்.

சிம்பு பாடிய தெலுங்கு பாடல்

சிலம்பரசன் பாடியுள்ள புல்லட் பாடல் இணையத்தில் ஹிட்டடித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ராம் பொத்தினேனியை வைத்து “தி வாரியர்” என்ற படத்தை லிங்குசாமி இயக்கி வருகிறார்.

படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, படத்தில் இடம்பெற்ற புல்லட் பாடலை தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சிலம்பரசனே பாடி அசத்தியுள்ளார்.

இந்தப் பாடல் யூ-டியூப் தளத்தில் ஹிட்டடித்துள்ளது. இளைஞர்களின் உதடுகளை முணுமுணுக்க வைக்கும் பாடலாகி இருக்கிறது.

விஜய்யின் சகோதரராக ஷாம்?

நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு சகோதரராக நடிக்க ஷாம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயற்கை, தில்லாலங்கடி, 6 மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஷாம் கடந்த சில ஆண்டுகளாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.

கேஜிஎஃப் ராக்கி பாய் அம்மா தமிழ் சீரியலில் நடித்துள்ளாரா?

இந்நிலையில், நடிகர் விஜய்யை வைத்து வம்சி இயக்கும் புதிய படத்தில் ஷாம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cinema news roundup interesting news in tollywood and bollywood