மகளிர் தினம்: கவிஞர் வைரமுத்துவின் கவிதை!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், உட்பட எல்லோரும் மகளிர் தின வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துவரும் நிலையில் கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில் அவர் எழுதியிருப்பதாவது:
கடவுளாக்கி
ஒதுக்குவதுமில்லை
அடிமையாக்கி
அடக்குவதுமில்லை
சில நேரங்களில்
ஆணினும் மேலானவள்
மற்றபடி நிகரானவள்
உன் தியாகத்தை –
திண்மையை –
கற்றுக்கொள்ளாமலே
கழிகிறது ஆண்கூட்டம்
நீ இல்லையேல்
ஈர்ப்புமில்லை;
காப்புமில்லை
எப்போதும்போல்
மகளிர் தினத்திலும்
மதிக்கிறேன் பெண்ணே!
என்று குறிப்பிட்டுள்ளார்.
கடவுளாக்கி
— வைரமுத்து (@Vairamuthu) March 8, 2022
ஒதுக்குவதுமில்லை
அடிமையாக்கி
அடக்குவதுமில்லை
சில நேரங்களில்
ஆணினும் மேலானவள்
மற்றபடி நிகரானவள்
உன் தியாகத்தை –
திண்மையை –
கற்றுக்கொள்ளாமலே
கழிகிறது ஆண்கூட்டம்
நீ இல்லையேல்
ஈர்ப்புமில்லை;
காப்புமில்லை
எப்போதும்போல்
மகளிர் தினத்திலும்
மதிக்கிறேன் பெண்ணே!#WomensDay
அஜித்தின் அடுத்த படத்தில் 2 கதாநாயகிகள்?
வலிமைப் படத்துக்கு பிறகு போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகும் படத்தில் அவருக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செக்கச்செவந்த வானம், காற்று வெளியிடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அதிதி ராவ் ஹைத்ரி, பீஸ்ட், முகமூடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பூஜா ஹெக்டே ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலியல் புகாரில் மலையாள பட இக்குநர் கைது
தன்னுடன் பணியாற்றிய பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதுடன் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் பிரபல இயக்குநர் லிஜு கிருஷ்ணாவை போலீஸார் கைது செய்தனர்.
ஒயிட் பாய்ஸ் பட இயக்குனரான லிஜு கிருஷ்ணா தற்போது ‘படவெட்டு’ படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில், நிவின் பாலி மற்றும் மஞ்சுவாரியர் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது, கண்ணூர் மாவட்ட போலீஸார் லிஜு கிருஷ்ணாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கொச்சிக்கு அழைத்துச் சென்று மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த விவகாரம் கேரள திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஹாலிவுட் படத்தில் அலியா பட்!
ஹைவே, கங்குபாய் கதியாவாடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ள முன்னணி பாலிவுட் நடிகை அலியா பட், ஹாலிவுட் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அலியா பட் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். ஷாருக் கான் உடன் டியர் ஜிந்தகி படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
ஏற்கனவே, பிரியங்கா சோப்ரா, தீபிகான படுகோன் ஆகிய நடிகைகள் ஹாலிவுட்டில் தடம் பதித்து வெற்றிக் கொடி நாட்டினர்.
இந்நிலையில், அலியா பட்டும் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
இஸ்ரேலி நடிகை கல்கடோட் உடன் அலியா பட் இணைந்து நடிக்கவுள்ளார்.

ஹார்ட்ஆஃப் ஸ்டோன் என்ற அந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்துக்காக தயாராகி வருகிறது. டாம் ஹார்பர் இப்படத்தை இயக்குகிறார்.
கிரிக்கெட் வீராங்கனை வாழ்க்கையில் டாப்சி
நடிகை டாப்ஸி, தனுஷ் உடன் ஆடுகளம் படத்தில் நடித்தவர். அதன் பிறகு அவர் தெலுங்கு திரைப்பட உலகில் சில படங்களில் நடித்து வந்தார். வழக்கமான கதாநாயகியாகவே அவரும் இருப்பார் என்று கருதிய வேளையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளில் நடித்து முத்திரை பதிக்க தொடங்கினார்.
இவரது படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கின.
ராஷ்மி ராக்கெட் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் வலிமையான கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வாழ்க்கை கதையில் அவர் நடித்து வருகிறார்.
TAAPSEE PANNU: 'SHABAASH MITHU' NEW POSTER… #NewPoster of #ShabaashMithu, the biopic on the life of #cricket legend #MithaliRaj… Stars #TaapseePannu… Directed by #SrijitMukherji… Produced by #Viacom18Studios. pic.twitter.com/Qmq3QrGq42
— taran adarsh (@taran_adarsh) March 8, 2022
மிதாலி ராஜ் கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்து வருபவர். தற்போது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டிலும் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.
சபாஷ் மிது என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கி வருகிறார். படம் ஹிந்தியில் தயாராகி வருகிறது. வயாகாம் 18 ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.
இந்த ஆண்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“