Advertisment

தியேட்டரில் ராம் சரண் மனைவி செய்த காரியம்.. வித்தியாசமான லுக்கில் பிக் பாஸ் இல்லம்.. மேலும் செய்திகள்

திரையரங்குகளில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் மிக முக்கியமான பதிவாக பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
Mar 27, 2022 12:09 IST
தியேட்டரில் ராம் சரண் மனைவி செய்த காரியம்.. வித்தியாசமான லுக்கில் பிக் பாஸ் இல்லம்.. மேலும் செய்திகள்தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதித்ததால் சினிமாவை விட்டு விலக நினைத்தாக பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் கூறியுள்ளார்.

Advertisment

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

நடிக்க தொடங்கியபோது, என் குடும்பம் என்னுடன் மட்டுமே இருக்கிறது என்று நினைத்துக் கொண்ட நான், அவர்களை சாதாரணமாக கருதி, பார்வையாளர்களின் மனதைக் கவரும் பயணத்தை மேற்கொண்டேன்.

சினிமா என்னை என் குடும்பத்திலிருந்து பிரித்துவிட்டதாக உணர்ந்தேன். நான் இனி நடிக்க மாட்டேன், திரைப்படங்களை தயாரிப்பேன் என்று எனது குடும்பத்தினரிடம் கூறினேன். நான் உங்கள் அனைவருடனும் இருக்க விரும்புகிறேன் என்று அவர்களிடம் கூறினேன். அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

என்னுடைய குழந்தைகள் அப்படி வித்தியாசமான நபராக மாற வேண்டாம் என்று கூறினர்.

நான் தவறு செய்கிறேன் என்று என் குழந்தைகளும் என்னுடைய மனைவி கிரணும் எனக்கு விளக்கினர். எனக்குள் சினிமா இருப்பதாக கூறிய கிரண் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு என்னிடம் கூறினார்.

எனக்கு சிந்திக்க நேரம் கிடைத்தது, நான் நிறைய சுயபரிசோதனை செய்தேன். எனக்குள் ஒரு பெரிய மாற்றம் வந்தது என்று அமீர் கான் தெரிவித்துள்ளார்.

தியேட்டரில் ராம் சரண் மனைவி.. வைரல் வீடியோ

ராம் சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படம் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தை பாகுபலி படத்தை இயக்கிய பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தை தியேட்டரில் ராம் சரண் மனைவி உபாசனா கண்டு ரசித்தார். அப்போது காகித் துண்டுகளை ரசிகர்கள் வீசி படத்தை கொண்டாடினர்.

அவரும் ரசிகர்களுடன் சேர்ந்து காகிதத் துண்டுகளை வீசி எறிந்து மகிழ்ச்சியுடன் படத்தை பார்த்து ரசித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் மலையாளம் சீசன் 4: அசத்தலான வடிவமைப்பில் தயாரான வீடு

பிக்பாஸ் நிகழ்ச்சி உலக அளவில் பிரபலமான நிகழ்ச்சியாகும். தமிழிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

மலையாளத்தில் இதுவரை 3 சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. 4ஆவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது.

மலையாளத்தில் இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகரான மோகன் லால் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தங்கியிருக்கும் வீடு ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கலை திறனுடன் வடிவமைக்கப்படும்.

இந்த முறை மலையாளம் சீசன் 4 பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக வித்தியாசமான முறையில் இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை பிரபல ஆர்ட் டைரக்டர் ஓமங் குமார் வடிவமைத்துள்ளார். மும்பை கோரேகான் ஃபிலிம் சிட்டியில் இது தயாராகியுள்ளது.

ஓடிடியில் இந்தப் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க..

1983ஆம் ஆண்டில் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது.

ஸ்போர்ட்ஸ் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதால் இந்தக் கதையும் படமாக்கப்பட்டது. இந்தப் படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ரண்வீர் சிங் நடித்திருந்தார்.

திரையரங்குகளில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் மிக முக்கியமான பதிவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படம் நெட்பிளிக்ஸ் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் ஆதியுடன் கல்யாணம் நிச்சயம்… நிக்கி கல்ராணி சந்தோஷ போட்டோஸ்

ஹிந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் காணக் கிடைக்கிறது.

தமிழில் இளம் நடிகரான ஜீவாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். அவர் முன்னாள் கிரிக்கெட் வீரரான தமிழர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இந்தப் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment