Advertisment

ராம் சரண் வேடத்தில் ரசிகர்கள்.. சந்தானம் படத்தின் வித்தியாசமான டைட்டில்… மேலும் செய்திகள்

இந்தப் படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் பாலிவுட் நடிகை அலியா பட், பாலிவுட் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
ராம் சரண் வேடத்தில் ரசிகர்கள்.. சந்தானம் படத்தின் வித்தியாசமான டைட்டில்… மேலும் செய்திகள்

‘பாய்ஸ்’ படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர், பரத். காதல், எம் மகன், தம்பிக்கு இந்த ஊரு, நேபாளி, கண்டேன் காதலை உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

Advertisment

சமீபத்தில் காளிதாஸ் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து பிராமதப்படுத்தியிருந்தார். அந்தப் படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஓடிடி தளத்திலும் அதிகப்படியான இளைஞர்களை அந்தப் படம் கவர்ந்தது. அவர் இதுவரை 49 படங்களில் நடித்துள்ளார். அவருடைய 50-ஆவது படத்தை பற்றிய அறிவிப்பு, இப்போது வெளியாகி இருக்கிறது. திகில் கலந்த குடும்ப கதையான இதில், பரத் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

பரத்-வாணிபோஜனுடன் ராதாரவி, விவேக் பிரசன்னா, டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஆர்.பி.பாலா, இந்தப் படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய, ரான்னி ரபேல் இசையமைக்கிறார்.

சந்தானம் படத்தின் வித்தியாசமான டைட்டில்

நடிகர் சந்தானம் தற்போது இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் நகைச்சுவைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'குளு குளு' என்று பெயரிடப்பட்டுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ் நாராயணன் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சந்தானம் 'குளு குளு' படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். சந்தானம் டப்பிங் பேசும் புகைப்படத்தை படத்தின் இயக்குனர் ரத்ன குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம்

காஷ்மீரில் 1990-களில் நடைபெற்ற பண்டிட்கள் மீதான தாக்குதல்கள், பண்டிட்கள் காஷ்மீரில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை விவேக் ரஞ்சன் அக்னிகொத்ரி இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அண்மையில் திரையிடப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.

இந்த திரைப்படம் வெளியாகிய முதல் 6 தினங்களில் இந்தியாவில் மட்டும் ரூ.80 கோடி வசூல் சாதனை படைத்து இருந்தது . பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படம் தற்போது ரூ.200 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் டப்பிங் செய்து விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளன.

இரு மாதங்களுக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் இருந்து தனுஷ் பெயரை நீக்கிய ஐஸ்வர்யா!

ராம் சரண் வேடத்தில் ரசிகர்கள்

நடிகர் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படம் வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான அல்லூரி சீதாராம ராஜு, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ராம் சரண் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் போல் வேடம் போட்டுக் கொண்டு ரசிகர்கள் ஊர்வலமாக வந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் பாலிவுட் நடிகை அலியா பட், பாலிவுட் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment