scorecardresearch

மிடுக்கான தோற்றத்தில் ஆர்யா.. பிரியங்கா சோப்ராவை சீண்டிய கங்கனா.. மேலும் செய்திகள்

இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிடுக்கான தோற்றத்தில் ஆர்யா.. பிரியங்கா சோப்ராவை சீண்டிய கங்கனா.. மேலும் செய்திகள்

இசை உலகின் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான 64-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்தது.

இந்த விழாவில், ரிக்கி கேஜ் இரண்டாவது முறையாக கிராமி விருதை வென்றார். “டிவைன் டைட்ஸ்..” என்ற ஆல்பம் பாடலுக்காக, ஸ்டீவர்ட் கோப்லேண்ட் உடன் சேர்ந்து அவர் விருது பெற்றுள்ளார்.
விருது மேடையில், ரிக்கி கேஜ் பார்வையாளர்களை நோக்கி “நமஸ்தே” என்று வணக்கம் செலுத்தி ஆச்சரியப்படுத்தினார்.

இந்த நிலையில், கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் ரிக்கி கேஜுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு நகரை பூர்வீகமாக கொண்ட ரிக்கி, 2015ம் ஆண்டு முதன்முறையாக கிராமி விருதை வென்றார். சிறந்த புதிய வயது ஆல்பம் பிரிவில், அவர் இயற்றிய “விண்ட்ஸ் ஆப் சம்சாரா..” என்ற ஆல்பம் பாடலுக்கு விருது கிடைத்தது.

64வது கிராமி விருது விழாவில், ஏராளமான இசை கலைஞர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்திய சினிமா உலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், இந்த நிகழ்ச்சியில் தனது மகன் ஏ.ஆர்.அமீனுடன் கலந்து கொண்டார்.

ஆர்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் ஆர்யா தற்போது ‘கேப்டன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘கேப்டன்’ திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2 வருடங்களுக்கு பிறகு வரும் அனுஷ்கா

அனுஷ்கா நடித்து கடைசியாக சைலன்ஸ் படம் வெளியானது. அதன்பிறகு, உடல் எடை கூடியதால் அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.

2 வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார். உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டார். இந்நிலையில், அவருக்கு தற்போது 2 புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன.

அதில் ஒரு படத்தில் தெலுங்கு நடிகர் நவீன் ஷெட்டியுடன் இணைந்து நடிக்கிறார். இதில் அனுஷ்கா இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளது.

அடுத்து பிரபாஸ் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க உள்ளார். மாருதி இயக்குகிறார். ஏற்கனவே பாகுபலி, பில்லா, மிர்சி ஆகிய படங்களில் அனுஷ்காவும் பிரபாசும் இணைந்து நடித்துள்ளனர்.

வீட்டில் மாட்டிக்கொண்ட சரவணன் சந்தியா… சிவகாமி அம்மா உங்க முடிவு என்ன?

நான் தான் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்-கங்கனா பெருமை

லாக் அப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், நான் தான் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பெருமையாக கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:
நான், நடிகர் அமிதாப் பச்சன், சல்மான் கான் ஆகியோர் தான் வெற்றிகரமான நிகழ்ச்சித் தொகுப்பாளர்காக இருக்கிறோம்.

பிரியங்கா சோப்ரா, ஷாருக் கான், அக்ஷய் குமார் மற்றும் ரண்வீர் சிங் ஆகியோர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியில் தோற்று விட்டனர் என்றார். இவர் எப்போதுமே தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திவிடும். அந்த வகையில் இத்தகைய கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cinema roundup entertainment roundup bollywood and kollywood

Best of Express