தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள தனது வீட்டின் வாசலுக்கு இன்று வந்த நடிகர் ரஜினிகாந்த் வாசலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்…
— Superstar Fans Club (@Rajini_RFC) April 14, 2022
தலைவா @rajinikanth 🤘#Thalaivar169 | #Superstar | #Rajinikanth pic.twitter.com/lF5ZFdyv1E
தந்தை-மகன் நடிப்பில் தயாராகியுள்ள படம்!
தெலுங்கில் முன்னணி நடிகரான மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அவரது மகன் ராம் சரண் இருவரும் இணைந்து ஆச்சார்யா என்ற படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியாகி கோடிக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கொரட்டலா சிவா இயக்கியுள்ளார். மணிசர்மா இசை அமைத்துள்ளார்.
படத்தின் டிரைலர் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
15 வருட பயணம்
சின்னத்திரை பிரபல வீஜேக்களில் கீர்த்தி. கிகி என அழைக்கப்படும் இவர், நடிகர் சாந்தனுவின் மனைவி ஆவார்.
வீஜே பயணத்தில் 15 வருடத்தை நிறைவு செய்திருக்கிறார் கீர்த்தி. அவரது இந்த சாதனையை ஜீ தமிழ் தொலைக்காட்சி சிறப்பித்து நினைவு பரிசை வழங்கியுள்ளது.
பவானி கேரக்டரில் இருந்து விலகியது ஏன்? விளக்கம் கொடுத்த வெண்பா ஃபரீனா
இந்தப் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ள கீர்த்தி, 15 வருடங்களில் பல தடைகள், ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளேன். இந்தப் பயணம் எளிமையானதல்ல. எனினும் உங்கள் அன்பு, ஆதரவுடன் இந்த நிலையை எட்டியுள்ளேன். உங்கள் அன்பு ஆதரவில்லாமல், இந்த வெற்றி சாத்தியமல்ல என்று தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
15yrs! I’ve seen so many hurdles,ups&downs,its never been an easy 1 bt nevertheless d journey&experience I’ve gained thru ur love,affection&support has made this sucha memorable one❤️Tnk u @ZeeTamil 4 dis recognition
— kiki vijay (@KikiVijay) April 12, 2022
Biggest tnx to my family-my pillar of support😍
xoxo- Kiki ❤️ pic.twitter.com/121iJhWR0l
இறுதிக் காட்சிக்காக கடுமையாக உழைத்தேன்-ஜூனியர் என்டிஆர்
ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிக்காட்சியில் நடித்தது பற்றி மனம் திறந்துள்ளார் ஜூனியர் என்டிஆர்.
ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆரும், ராம் சரணும் நடித்து இருந்தனர்.
இந்தப் படம் பல சாதனைகளை படைத்து வருகிறது. பாகுபலி படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமெளலி இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
நான் தினமும் 6 முதல் 7 மணி நேரம் வரை ஓடினேன். நான் உடல் தகுதியுடன் இருப்பதற்காக அதுபோன்று பயிற்சிகளை மேற்கொண்டேன். இறுதிக்காட்சியில் நடிப்பதற்காக இதுபோன்று கடின உழைப்பை கொடுத்தேன் என்றார் ஜூனியர் என்டிஆர்.
இவர் அடுத்ததாக கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “