Advertisment

சமந்தா கொடுத்த அட்வைஸ்.. நடிகையின் நடனத்துக்கு 10 லட்சம் லைக்ஸ்.. மேலும் செய்திகள்

இந்தப் பாடலின் நடனமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியா முழுவதும் இளைஞர்களும், இளம் பெண்களும் இந்தப் பாடலை ஒலிக்கவிட்டு நடனமாடி சமூக வலைதளங்களில் அவற்றை பகிர்ந்து வருகின்றனர்.

author-image
WebDesk
Apr 18, 2022 12:32 IST
சமந்தா கொடுத்த அட்வைஸ்.. நடிகையின் நடனத்துக்கு 10 லட்சம் லைக்ஸ்.. மேலும் செய்திகள்

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த 'ஆர்டிகிள் 15' தமிழில் 'நெஞ்சுக்கு நீதி'யாக ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார்.

திபு நிணன் தாமஸ் இசை அமைத்துள்ளார். கனா என்ற வெற்றி படத்துக்கு பிறகு அருண்ராஜா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். வசனங்கள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.

10 லட்சம் லைக்குகளை குவித்த நடிகையின் நடனம்

சமீபத்தில் பீஸ்ட் படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.

இந்தப் பாடலின் நடனமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியா முழுவதும் இளைஞர்களும், இளம் பெண்களும் இந்தப் பாடலை ஒலிக்கவிட்டு நடனமாடி சமூக வலைதளங்களில் அவற்றை பகிர்ந்து வருகின்றனர்.

கேரளத்தைச் சேர்ந்த அனுபமா பரமேஸ்வரனும் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

அவரது நடனத்துக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக்குகளை அளித்துள்ளனர்.

கொடி படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் தான் இந்த அனுபமா பரமேஸ்வரன்.

வசூலில் சாதனை படைத்துவரும் கேஜிஎஃப் -2

யஷ் நடித்துள்ள கேஜிஎஃப் படத்தின் 2ஆம் பாகம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

படத்தின் சண்டைக் காட்சிகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், படம் பல வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. படம் வெளியான அன்றே ரூ.100 கோடி சாதனை படைத்ததாக தகவல்கள் வெளியாகின.

முதல் வார இறுதியில் ரூ.500 கோடி சாதனை புரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐந்து மொழிகளில் வெளியான இந்தப் படம் உலக அளவில் இந்தச் சாதனையை படைத்துள்ளது.

ரசிகர்களுக்கு சமந்தாவின் அட்வைஸ்

சமீபத்தில் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பலாம் என்று நடிகை சமந்தா கூறியிருந்தார்.

பல கேள்விகளுக்கு சமந்தா பதிலளிக்கவும் செய்தார்.

அப்போது ஒரு ரசிகர் உங்களுக்கு இன்னும் பச்சைக்குத்தி கொள்ளும் ஐடியா ஏதாவது இருக்கா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர் இல்லை. இனி பச்சை குத்திக் கொள்ளப் போவதில்லை. ரசிகர்களாகிய உங்களுக்கும் சொல்கிறேன். பச்சைக் குத்தி கொள்ளாதீர்கள் என்று பதிலளித்தார்.

பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்த பீஸ்ட்; வசூல் மழை பொழியும் கேஜிஎஃப் 2

சமந்தா தனது உடலில் மூன்று இடங்களில் பச்சை குத்தி கொண்டுள்ளார். முதுகில் அவர் ஒய்எம்சி என்ற பச்சைகுத்தியிருக்கிறார். அதாவது யே மாய சேசாவா என்பதை குறிக்கும் வகையில் பச்சை குத்தியிருந்தார். அந்தப் படம் தான் தெலுங்கில் அவர் அறிமுகமான படம் ஆகும். அதில் நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்திருந்தார்.

விலா எலும்பில் சாய் என்று பச்சை குத்தியிருக்கிறார். அதுவும் நாக சைதன்யாவை குறிப்பதாகவே இருக்கிறது. மூன்றாவது கை மணிக்கட்டில் வைகிங் சிம்பலை குத்தியிருக்கிறார். அதே போன்று நாக சைதன்யாவும் பச்சைகுத்தியிருக்கிறார்.

இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment