Vijay’s Beast movie decline in box office collection: கேஜிஎஃப் 2 படம் வெளியானதிலிருந்து, விஜய்யின் பீஸ்ட் படம் வசூலில் சரிவைச் சந்தித்து வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்க, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பீஸ்ட் படம் கடந்த 13 ஆம் தேதி வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் ரிலீஸூக்கு முன்னும் வெளியான முதல் நாளும் வசூல் மழை பொழிந்தது.
ஆனால் ஏப்ரல் 14 ஆம் தேதி யாஷ் நடிப்பில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியானது முதல், பீஸ்ட் படம் வசூலில் சரிவைச் சந்தித்துள்ளது. சென்னையில் பீஸ்ட் படம் ரூ. 1.37 கோடிகளை மட்டுமே ஈட்டியுள்ளது.
வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலனின் ட்வீட் படி, பீஸ்ட் படம் ஓடும் பல திரையரங்குகள் காலியாக உள்ளன. பீஸ்ட் படம் சிறந்த தொடக்கத்தில் இருந்தபோதும், வார இறுதியில் பெரும் சரிவைக் கண்டது.
தேனியில் உள்ள ஒரு திரையரங்கின் தற்போதைய நிலை. பீஸ்ட் படத்தில் ஒரு டிக்கெட் கூட விற்பனையாகவில்லை. அதுவும் படம் வெளியாகி 4 நாள் (சனிக்கிழமை) மட்டுமே ஆகியுள்ளது, என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், மதுரை காசி திரையரங்கில் இரவு 10:20 மணிக்கு பீஸ்ட் படத்திற்கு ஒரு டிக்கெட் கூட விற்பனையாகவில்லை என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: சிட்டி ரோபோவாக மாறிய சிவாங்கி… மேக்கப் எப்படி போட்டாங்க தெரியுமா?
அடுத்த பதிவில் பீஸ்ட் படம் கேரளாவில் பெரிய அளவில் வியாபாரம் செய்யவில்லை, அங்கு 4 நாட்களில் 7.89 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது.
#பீஸ்ட் கேரளா பாக்ஸ் ஆபிஸ்
COLLOSAL பேரழிவு
நாள் 1 - 6.28 கோடி
நாள் 2 - 0.91 கோடி
நாள் 3 - 0.70 கோடி
மொத்தம் - 7.89 கோடி
பிரேக் ஈவன் எண்ணிக்கை = 15 - 16 கோடிக்கு அருகில் கூட வராது. என பதிவிட்டுள்ளார்.
சென்னையில் பீஸ்ட் வசூல் குறித்த பதிவில், சென்னையில் பீஸ்ட் ரூ.1.37 கோடி வசூல் செய்தது.
#சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் - ஏப்ரல் 16:
1. #பீஸ்ட் - 1.37 கோடி
2. #KGF அத்தியாயம் 2 - 76 லட்சம் என பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil