இயக்குனர் ரத்ன குமார் இயக்கும் 'குளு குளு' படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகர் சந்தானம்.
இந்த திரைப்படத்தில் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன், சேசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த நிலையில் குளு குளு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகர் சந்தானம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின் இறுதிநாளன்று படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
15 ஆண்டு திருமண வாழ்வை நிறைவு செய்த நடிகை
ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதியினர் இன்று தங்களது 15 ஆவது ஆண்டின் திருமண நாளை சிறப்பாக கொண்டாடினர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு, ஏப்ரல் 20 ஆம் தேதி ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறாள்.
தற்போது 15ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதியினருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கீர்த்தி பாண்டியனின் அடுத்த படம்
நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்து நல்ல நடிகை என பெயர் வாங்கினார்.
அதற்கு முன்பே தும்பா என்ற படத்தில் அறிமுகமாகிவிட்டார் என்ற போதிலும் தந்தையுடன் நடித்த அன்பிற்கினியாள் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
இந்நிலையில் அவர் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படத்தின் பெயர் கொஞ்சம் பேசினால் என்ன என்ற சூட்டப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: என்ன ராதிகா இதுக்கே இப்படினா… கோபி பத்தி தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க?
கிரி மர்ப்பி இயக்குகிறார். வினோத் கிஷன் நாயகனாக நடிக்கிறார். லெனின் ஒளிப்பதிவு செய்கிறார்.
நடிகர் நாசருக்கு கோல்டன் விசா
ஐக்கிய அரபு அமீரகம் இந்திய திரைப்பட நடிகர்-நடிகைகளுக்கு கோல்டன் விசா வழங்கி கெளரவித்து வருகிறது.
இந்த கோல்டன் விசா மூலம் 10 ஆண்டுகளுக்கு துபாயில் அந்த நாட்டின் குடிமகனாக அவர்கள் இருக்க முடியும். இந்த கோல்டன் விசா நடிகர் நாசருக்கு வழங்கி கெளரவித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“