வருகிற ஜூன் மாதம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும், திருமண தேதியையும் முடிவு செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருந்து கடந்த 6 வருடங்களாக காதலித்து வருகிறார்கள்.
விக்னேஷ் சிவனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்று நயன்தாரா அறிவித்தார்.
வருகிற ஜூன் மாதம் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும், திருமண தேதியையும் முடிவு செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
திருமணம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை இருவரும் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படக்குழுவுக்கு ட்ரீட் வைத்த நடிகர் விஜய்
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 13-ந்தேதி வெளியான திரைப்படம் 'பீஸ்ட்'. இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
பீஸ்ட் திரைப்படம் நல்ல வசூலை குவித்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கவலையில் இருந்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய், பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்து கொடுத்துள்ளார்.
இளம் வயதில் பாலியல் சீண்டலை எதிர்கொண்ட நடிகை
தாம் தூம், தலைவி ஆகிய படங்களில் நடித்துள்ள கங்கனா ரணாவத், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் தனக்கு இளம் வயதில் நேர்ந்த பாலியல் சீண்டல்களை பகிர்ந்தார்.
அவர் கூறுகையில், "எனது ஊரில் ஒருவர் தகாத முறையில் என்னை தொடுவார். எனக்கு அப்போது எதுவும் புரியவில்லை. இதுபோன்ற நிறைய குழந்தைகள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகின்றனர்" என்றார் அவர்.
Oh My Dog: குழந்தைகளுடன் பார்த்து கொண்டாட வேண்டிய திரைப்படம்!
நடிகை லட்சுமிக்கு கர்நாடக அரசு விருது
ஜீன்ஸ், பால்குடம், எதிரொலி, மாணவன், நவகிரகம் என பல படங்களில் நடித்தவர் நடிகை லட்சுமி.
இவருக்கு கர்நாடக அரசு சார்பில் நடிகர் ராஜ்குமார் பெயரிலானா வாழ்நாள் சாதனையாளர் விருதை அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை வழங்கி கெளரவித்தார்.
தற்போது கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக அவர் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil