scorecardresearch

பிரபல திரைப்பட விழாவில் கமல் பட டிரைலர்.. நடிகையாக உள்ள கிரிக்கெட் வீரரின் மகள்

நடிகை சமந்தாவுக்கு எதிரான பதிவுகள் மற்றும் மீம்ஸ்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கும் படத்தின் பூஜை நடந்தபோது, சமந்தா கலந்து கொள்ளாததை குறை கூறினர்.

பிரபல திரைப்பட விழாவில் கமல் பட டிரைலர்.. நடிகையாக உள்ள கிரிக்கெட் வீரரின் மகள்

நடிகை சமந்தாவுக்கு எதிரான பதிவுகள் மற்றும் மீம்ஸ்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
சமீபத்தில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கும் படத்தின் பூஜை நடந்தபோது, சமந்தா கலந்து கொள்ளாததை குறை கூறினர்.

நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்து இருப்பதை ஒப்பிட்டும் சமந்தாவை விமர்சித்தனர். இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் சமந்தா காட்டமாக புதிய பதிவை வெளியிட்டு உள்ளார்.

அதில் “என்னுடைய மவுனத்தை அறியாமை என்றும், எனது அமைதியை ஏற்றுக்கொள்வது என்றும், எனது கருணையை பலவீனம் என்றும் நினைக்க வேண்டாம். கருணைக்கும் காலாவதி இருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபல திரைப்பட விழாவில் கமல் பட டிரைலர்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தின் டிரைலர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் டிரைலரை மே 18 ஆம் தேதி உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

புஷ்பா 2 -சம்பளத்தை உயர்த்திய அல்லு அர்ஜுன்</strong>

சுகுமார் இயக்கிய படம் புஷ்பா. செம்மரக் கடத்தை மையப்படுத்தி இந்தப் படம் வெளியானது.
இதன் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.

முதல் பாகத்தில் பெற்ற சம்பளத்தை விட கதாநாயகன் அல்லு அர்ஜுன் கூடுதல் சம்பளம் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகையாக உள்ள கிரிக்கெட் வீரரின் மகள்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா தெண்டுல்கர் மருத்துவ படிப்பை முடித்துள்ள சாரா நடிப்பில் ஆர்வம் உள்ளதாக கூறப்படுகிறது.

2021-ல் மாடலிங் துறையில் அவர் அறிமுகமானபோது, சாரா பாலிவுட் திரையுலகிலும் காலடி எடுத்து வைப்பார் என்ற கூறப்பட்டன.

நடிகர் விமல் கொடுத்த மோசடி புகார் : தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது

இந்நிலையில், சாரா விரைவில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகலாம் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cinema roundup entertainment roundup bollywood and kollywood

Best of Express