திரைப்பட விழாவில் நடுவரான பாலிவுட் நடிகை.. விஜய் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்?
மே மாதம் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை கேன்ஸ் திரைப்பட விழா நடக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, கேன்ஸ் பட விழாவில் திரையிடப்படும்.
மே மாதம் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை கேன்ஸ் திரைப்பட விழா நடக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, கேன்ஸ் பட விழாவில் திரையிடப்படும்.
Advertisment
இறுதியில் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்படும். விருது பெற தகுதியான படங்களை தேர்வுசெய்ய பிரெஞ்ச் நடிகர் வின்செண்ட் லிண்டன் தலைமையில் 8 பேர் கொண்ட நடுவர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில், ஐயன்மேன் 3 படத்தின் நாயகி ரெபேக்கா ஹால், இயக்குனர் ஜேப் நிக்கோலஸ் ஆகியோரும் உள்ளனர்.
இவர்களுடன் இந்தி நடிகை தீபிகா படுகோனேவும் நடுவர்களில் ஒருவராக தேர்வாகி இருக்கிறார். இதற்காக அவருக்கு ரசிகர்களும், திரையுலகினரும் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
விதார்த் நடிப்பில் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ள படம்
Advertisment
Advertisement
விதார்த், லஷ்மி பிரியா, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் பயணிகள் கவனிக்கவும்.
இந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தை எஸ்.பி.சக்திவேல் இயக்கியுள்ளார்.
சமந்த் நாக் இசையமைத்துள்ளார். ஆஹா ஓ.டி.டி. தளத்தில் இந்தப் படம் வெளியிடப்பட்டுள்ளது.
இரங்கல் செய்தி வெளியிட்ட விஜயகாந்த்
நடிகர் சலிம் கவுஸ் அவர்கள் காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். மிகச்சிறந்த நடிகரும், பழகுவதற்கு நல்ல மனிதருமான நடிகர் திரு. சலிம் கவுஸ், சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் என்னுடன் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அவரது மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டார்.
நடிகர் சலிம் கவுஸ் அவர்கள் காலமானார் என்ற செய்தியை கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். மிகச்சிறந்த நடிகரும், பழகுவதற்கு நல்ல மனிதருமான நடிகர் திரு. சலிம் கவுஸ், சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் என்னுடன் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அவரது மறைவு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது pic.twitter.com/gfd2lZBpcY
67-வது படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத்திடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வம்சி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 66-வது படம். நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil