ஜி.வி. பிரகாஷ்குமார் நடிப்பில் 'ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கியுள்ள திரைப்படம் 'ஐங்கரன்'.
காமன்மேன் நிறுவனம் சார்பில் பி.கணேஷ் படத்தை தயாரித்துள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக, மகிமா நம்பியார் நடித்துள்ளார்.
மேலும், காளி வெங்கட், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
வருகிற மே மாதம் 5 ம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.
டான் படத்தின் புதிய அப்டேட்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’.
அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பிரைவேட் பார்ட்டி என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மொழி இந்தி இல்லை, சமஸ்கிருதம்-பாலிவுட் நடிகை
தமிழ், கன்னடம், இந்தியைவிட பழமையானது சமஸ்கிருதம் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக கர்நாடகா திரையுலக நடிகர் கிச்சா சுதீப் இந்தி தொடர்பாக ஒரு பதிவை செய்திருந்தார்.
அதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஒரு பதில் பதிவை செய்திருந்தார். அதில் இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி என்ற கருத்தை அஜய் தேவ்கன் பதிவு செய்திருந்தார். அதற்கு பலரும் தங்களுடைய விமர்சனத்தை பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில், தேசிய மொழி எது என்று என்னைக் கேட்டால், அது இந்தி இல்லை, சமஸ்கிருத மொழியாக இருக்கலாம் என நினைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது பெருமை கொள்ள பிறப்புரிமை உள்ளது என்று கங்கனா தெரிவித்தார்.
இரட்டை வேடங்களில் கார்த்தி நடிக்கும் படம்!
நடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகி வரும் படம் சர்தார். இந்தப் படத்தில் ராஷி கன்னா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்தப் படத்தை ஹீரோ படத்தை இயக்கிய மித்ரன் இயக்கி வருகிறார்.
எஸ்.ஏ.சி நாடகத்தில் இளையராஜா மெட்டு: அடடே… அப்புறம் இந்தப் பாட்டு சினிமாவில் செம ஹிட் ஆனதே..!
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil