Advertisment

ஆஸ்கர் விருது வென்ற மாற்றுத்திறனாளி நடிகர்.. தனுஷுக்கு ஜோடியாக சுவீடன் நடிகை.. மேலும் செய்திகள்

உலகம் முழுவதும் காது கேளாமல் இருப்பவர்களுக்கு இவ்விருதை சமர்ப்பிக்கிறேன் என்று அவர் கூறியது அனைவரின் மனதையும் தொட்டது.

author-image
WebDesk
New Update
ஆஸ்கர் விருது வென்ற மாற்றுத்திறனாளி நடிகர்.. தனுஷுக்கு ஜோடியாக சுவீடன் நடிகை.. மேலும் செய்திகள்



94-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் தி வெஸ்ட் சைட் ஸ்டோரி படத்துக்கு ஒரே ஒரு விருது மட்டுமே கிடைத்தது.

ஸ்டீவ் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

Advertisment

கோடா படத்தில் நடித்த ட்ராய் கோட்சுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்தது.

இவருக்கு காது கேட்காது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் காது கேளாமல் இருப்பவர்களுக்கு இவ்விருதை சமர்ப்பிக்கிறேன் என்று அவர் கூறியது அனைவரின் மனதையும் தொட்டது.

Oscars 2022: CODA star Troy Kotsur becomes first deaf male actor to win an  Oscar and second deaf performer to win overall : Bollywood News - Bollywood  Hungama

கேஜிஎஃப் படக் குழுவை வாழ்த்திய விஜய் பட இயக்குநர்

கேஜிஎஃப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, அதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது.

இந்தப் படத்தில் கன்னட முன்னணி நடிகர் யஷ், கீர்த்தி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதன் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் படமான பீஸ்டுக்கு போட்டியாக எனது படத்தை கருதவில்லை. அவர் அடைந்த உயரம் மிகப் பெரியது என்றார்.

இதனிடையே, கேஜிஎஃப் படத்தின் டிரைலரை விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் பாராட்டியுள்ளார்.

தனுஷுக்கு ஜோடியாக சுவீடன் நடிகை

தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் மாறன் படம் ஓடிடியில் வெளியானது.

இந்த படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தனுஷ் தற்போது தன அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இந்தப் படத்தில் சுவீடன் நாட்டை சேர்ந்த எல்லி அவுர் என்பவர் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரயிலில் சென்ற பேட்ட பட வில்லன்

ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து இருந்தவர் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக். இந்த படத்தின் மூலமாக தான் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். ஆனால், அவர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வருபவர்.

இந்நிலையில் மும்பையில் நவாஸுதீன் சித்திக் தனது காரை விட்டுவிட்டு லோக்கல் ரயிலில் சென்று இருக்கிறார்.

வொய்ஃப் மாசமானா ஒரு கார்… குழந்தை பிறந்தா இன்னொரு கார்… இதுவரை 4 கார்… அசத்தும் ஆல்யா தம்பதி

மாஸ்க் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து அவர் சென்றதால் அவரை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment