2 வயது குழந்தையை விட்டு விட்டு சீரியல் நடிகை தற்கொலை

நிதி நெருக்கடி குறித்து கவலையுடன் பேசிய பத்மஜா, சரியான வேடங்கள் அமையவில்லை எனவும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்

Serial actress Padmaja suicide
Serial actress Padmaja suicide

திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் துணை வேடங்களில் நடித்த 23 வயது நடிகை, திருவெற்றியூரில் உள்ள தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இது வேற லெவல் என்ட்ரி… ஐ.பி.எல்-ல் மரண மாஸ் காட்ட சென்னை வந்த தோனி!

காலடிபேட்டையில் வசிந்து வந்த அவரது பெயர் பி பத்மாஜா. தனது கணவர் பவனுடன் (25), இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த வீட்டில் வாடகைக்கு குடியேறியதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அவர்களது இரண்டு வயது மகன் உறவினரின் வீட்டில் வளர்க்கப்பட்டு வருகிறான். பத்மஜாவும், அவரது கணவரும் வார இறுதி நாட்களில் குழந்தையை பார்த்து வந்திருக்கிறார்கள். இரவு லேட்டாக வருவதாக பத்மஜாவுக்கும், அவர் கணவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கடந்த மாதம் கணவரிடம் இருந்து பிரிந்த பத்மஜா, கடந்த மாதம் ஆந்திராவுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

கடன் காரணமாக பத்மஜா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. “சனிக்கிழமை இரவு அவர் தனது சகோதரிக்கு வீடியோ கால் செய்திருக்கிறார். அப்போது தனது நிதி நெருக்கடி குறித்து கவலையுடன் பேசிய பத்மஜா, சரியான வேடங்கள் அமையவில்லை எனவும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்” என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

என்.பி.ஆர் கணக்கெடுப்பில் 3 கேள்விகள் கேட்க மாட்டோம்: முதல்வர் பழனிசாமி உறுதி

இரண்டு நாட்கள் வீடு பூட்டப்பட்டு விளக்குகள் அணைக்கப்பட்டிருப்பதைக் கண்ட வீட்டின் உரிமையாளர் எஸ்.காசிநாதன், சந்தேகத்தின் பேரில் திருவெற்றியூர் போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அங்கு விரைந்த போலீஸ் டீம் வீட்டை திறந்து பார்த்தபோது பத்மஜா தூக்கில் தொங்கியது தெரிய வந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்தத் தற்கொலையின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cinema serial supporting actress commits suicide thiruvottiyur

Next Story
சூர்யா- ஹரி கூட்டணியில் அடுத்த படம் ‘அருவா’: அதிகாரபூர்வ அறிவிப்புtamil movie, tamilrockers, Tamil cinema, ngk tamil movie
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com