புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பிற்கான கட்டணத்தை குறைத்த முதல்வர் ரங்கசாமியை, நடிகர் பார்த்திபன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்
கொரோனா காலத்தின் போது புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணங்கள் உயர்த்தப்பட்டன, புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து திரைத்துறையை சார்ந்த பலர் வலியுறுத்தி வந்த நிலையில், புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்புகளுக்கான கட்டணம் வெகுவாக குறைக்கப்பட்டது,
இந்நிலையில் படப்பிடிப்புக்கான கட்டணத்தை குறைத்த முதலமைச்சர் ரங்கசாமியை நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தார்,
தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், புதுச்சேரியில் பிடிப்பு கட்டணத்தை குறைத்த முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த கட்டணம் இன்னமும் குறைக்கப்பட்டால் புதுச்சேரியில் சுற்றுலா மேம்படும், நிறைய படப்பிடிப்பு நடைபெறும், உலகில் மிக அழகான கடற்கரை நகரங்களில் புதுச்சேரியும் ஒன்று என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“