/tamil-ie/media/media_files/uploads/2023/06/Saran-Raj.jpg)
துணை இயக்குனர் சரண்ராஜ் மற்றும் விபத்தை ஏற்படுத்திய கார்
துணை நடிகரின் கார் மோதி வெற்றிமாறன் படத்தின் துணை இயக்குனரும் நடிகருமான சரண்ராஜ் என்பவர் மரணமடைந்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறனிடம் துணை இயக்குனராக பணியாற்றி வருபவர் சரண்ராஜ். சென்னை மதுரவாயல் தனலட்சுமி தெருவை சேர்ந்த இவர், வெற்றிமாறனின் வட சென்னை, அரசுரன் உள்ளிட்ட படங்களில் சில காட்சிகள் நடித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் சரண்ராஜ் கே.கே.நகர் ஆற்காடு சாலையில் தனது இரு சக்கரவாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த கார் சரண்ராஜ் இரு சக்கரவாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி விசப்பட்ட சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சரண்ராஜூன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், காரை ஓட்டி வந்தவர் சென்னை சாலிகிராமம் எம்.சி அவன்யூவை சேர்ந்த பழனியப்பன் (41) என்பது தெரியவந்தது.
சினிமாவில் துணை நடிகராக இருந்து வரும் பழனியப்பன் இறந்த சரண்ராஜூன் நண்பர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் குடிப்பழக்கம் உள்ள பழனியப்பன், நேற்றும் அதிகமான போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து அருகில் இருந்த சிசிடிவி கேமராவை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.