Cinema Tamil News: 90’ஸ் கிட்ஸ்களின் வாழ்வில் என்றும் மறக்கவே முடியாத ஸ்வீட் மெமரீஸ்களில் ‘சக்திமான்’ தொடரும் ஒன்று. தூர்தர்ஷனில் கடந்த 1997ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டுவரை ஒளிபரப்பான இந்தத் தொடரை நடிகர் முகேஷ் கண்ணா தயாரித்து நடித்திருந்தார். தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வாரந்தோறும் ஞாயிற்றுகிழமைகளில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடருக்கு என தனி ரசிகர் பெருங்கூட்டம் இருந்தது.
எளிதில் மறந்துவிட அளவில் சிறுவயது தாக்கத்தை ஏற்படுத்த இந்த சக்திமான் தொடர் குறித்து பேசினால், இன்றும் அந்த தொடரின் காட்சிகள் கண்முன் வந்து செல்கின்றன. அதோடு ஒவ்வருக்குள்ளும் இணம் புரியா மகிழ்ச்சியும் தொற்றிக்கொள்கிறது. அந்தளவுக்கு ஒரு சூப்பர் ஹீரோவாக, மக்களின் ஹீரோவாக சக்திமான் அனைவரையும் ஈர்த்திருப்பார்.

இந்தியாவில் உருவான கொரோனா தொற்று அச்சத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில், 90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. டி.ஆர்.பி.யிலும் பல முன்னணி தொடர்களை முந்தியது. அதோடு, சக்திமான் தொடருக்கு ரசிகர்களிடையே இன்றளவும் உள்ள வரவேற்பையும் உலகரியச் செய்தது.

இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு பிறகும் ரசிகர்கள் மனதில் நீங்க இடம்பிடித்துள்ள சக்திமான் தொடர் தற்போது திரைப்படமாக தயாராக இருக்கிறது. சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 3 பாகங்களை கொண்ட இந்த படத்தில் இந்திய முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார்.
இது தொடர்பாக சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள டைட்டில் டீசரில் சூப்பர் ஹீரோ சக்திமானுக்குக்கான பிரத்யோக ஆடை வடிவமைக்கப்பட்டு காட்டப்படுகிறது. மேலும், “மனிதகுலத்தின் மீது இருளும் தீமையும் நிலவுவதால், அவர் திரும்புவதற்கான நேரம் இது.” என்றும் அந்த டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#SonyPictures Intl Prod acquires *film adaptation rights* of the hugely popular superhero show #Shaktimaan… #Sony will partner with Brewing Thoughts P Ltd [ex-film journalist #PrashantSingh and #Madhurya Vinay] in association with actor-producer #MukeshKhanna’s Bheeshm Intl.
— taran adarsh (@taran_adarsh) February 10, 2022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“