scorecardresearch

’கங்கனாவால் படத்திலிருந்து விலகினேன்’ – ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

“சில சமயங்களில், நம் மனதில் என்ன தோன்றுகிறதோ… அதுவே சரி.”

PC-Sreeram Rejected a Film Because Of Kangana-Ranaut
கங்கனா ரனாவத் – பி.சி.ஸ்ரீராம்

நடிகை கங்கனா ரணாவத் நடிப்பதால், அந்தப் படத்திலிருந்து தான் விலகியதாக, மூத்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகைகள் டான்ஸ் ஆடலாம்: ஆனா இவங்க இன்னும் ஸ்பெஷல்!

ஜெயம் ரவி நடித்த தாம் தூம் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்தார். இதை தொடர்ந்து இவர் இந்தியில் முன்னணி ஹீரோயினாக நடித்து வருகிறார். நடிகர் சுஷாந்தின் மறைவுக்கு பிறகு, இவர் தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை முன் வைத்து பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அரியர் மாணவர்கள் பிரச்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்த இ-மெயில் நிஜமா?

இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் குறித்து, ஒரு அதிர்ச்சி தகவலை ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”கங்கனா ரனாவத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதால், ஒரு படத்தை நான் தவிர்க்க வேண்டிய நிலை வந்தது. எனக்கு அது அசௌகர்யமாக இருந்தது. நான் இதை தயாரிப்பாளரின் தரப்பில் சொன்ன போது, அவர்களும் புரிந்து கொண்டார்கள். சில சமயங்களில், நம் மனதில் என்ன தோன்றுகிறதோ… அதுவே சரி. குழுவினருக்கு எனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Cinematographer pc sreeram rejected kangana ranaut film

Best of Express