/indian-express-tamil/media/media_files/2025/07/30/shankar-2025-07-30-12-54-20.jpg)
தனது எதார்த்தமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மணிகண்டன். வசனகர்த்தா, குறும்பட இயக்குநராக வலம் வந்த நடிகர் மணிகண்டன் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ’ஜெய்பீம்’ படத்தில் இவரின் நடிப்பு பார்ப்போரை கண்கலங்க வைத்தது. தொடர்ந்து, ‘குட்நைட்’, ‘குடும்பஸ்தன்’ போன்ற திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பால் ஒரு கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
நடிகர் மணிகண்டன் தற்போது பல முக்கிய இயக்குநர்களின் படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் தன்னை விரட்டியடித்தது குறித்து அவர் மனம் திறந்து. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் மணிகண்டன் பேசியதாவது, “நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது கணக்கு டியூசன் போய்கொண்டிருந்தேன். அப்போது ‘அந்நியன்’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கோட்டூர்புரத்தில் ஒரு சண்டை காட்சி இருக்கும். அந்த சண்டை காட்சியை இயக்குநர் ஷங்கர் எடுத்துட்டு இருந்தாரு.
நான் அந்த பக்கமாக புத்தகங்களை எடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தேன். அப்போது படப்பிடிப்பு தளத்தில் நின்று கொண்டிருந்த இயக்குநர் ஷங்கரை பார்த்து கை அசைத்தேன். அவர் என்ன முறைத்து கொண்டே பார்த்து கொண்டிருந்தார். அப்பறம் என்ன என்று கேட்டார். அதற்கு நான் ஆட்டோகிராஃப் வேண்டும் என்று சொன்னேன்.
நான் கொடுத்த பேனாவில் இங்க் (Ink) கசிந்திருந்தது. அதை தலையில் சேய்த்துக் கொண்டு இதை வைத்து தான் தேர்வு எழுதுகிறாயா? என்று கேட்டார். அப்போது நான் இயக்குநர் ஷங்கரிடம் நீங்கள் இயக்கிய ‘பாய்ஸ்’ திரைப்படத்தை பல தடவை பார்த்திருக்கிறேன் என்று கூறினேன்.
இதை கேட்ட இயக்குநர் ஷங்கர் நீ எதுக்கு அந்த படத்த பாத்த? சரி எப்படி அந்த படத்த பாத்த என்று கேட்டார். அதற்கு நான் சிடி (CD)-யில் பாத்தேன் என்று சொன்னேன். அதில் கடுப்பான ஷங்கர், உனக்கு ஆட்டோகிராஃப்-வும் இல்ல எதுவும் இல்லனு சொல்லிட்டாரு. அப்பறம் அன்புடன் ஷங்கர்னு போட்டு கொடுத்தாரு என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.