இன்வான் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஷீத் கதையெழுதி இயக்கியுள்ள "அழகான ராட்சஸிகள்" எனும் திரைபடத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Advertisment
கோவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதில் முக்கிய குற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இன்வான் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஷீத் கதையெழுதி இயக்கியுள்ள "அழகான ராட்சஸிகள்" எனும் திரைபடத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.
இதில் பிரபல தெலுங்கு திரையுலக நாயகி நேஹா ரேஷ்பாண்டே, ஃபெரா, மீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்,நடிக்க வில்லனாக படத்தின் இயக்குனர் ரஷீத் நடித்துள்ளார். இந்நிலையில் அழகான ராட்சஸிகள் திரைப்படம் குறித்து அதன் தயாரிப்பாளர்கள் இலியாஸ்,ஹரீஸ் ஷா மற்றும் இயக்குனர் ரஷீத் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினார்.
Advertisment
Advertisements
அப்போது அவர்கள் தமிழ்படங்களுக்கு இந்தியா முழுவதும் வரவேற்பு இருப்பதாகவும்,அதனாலேயே எங்களது தயாரிப்பில் முதல் படைப்பாக தமிழ் படங்களை தயாரிப்பதாக தயாரிப்பாளர்கள் கூறினர். இதனை தொடர்ந்து பேசிய இயக்குனர் ரஷீத், கோவையில் சில வருடங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருப்பதாகவும் படப்பிடிப்புகள் முழுவதும் கோவை ஆனைக்கட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்றதாக குறிப்பட்டார். மேலும் கோவையை உலுக்கிய குற்ற சம்பவத்தை வைத்து படமாக்குவது மிகுந்த சவாலாக இருந்தது என்றும் ரஷீத் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil