கோயம்புத்தூர் மாவட்டத்தில் உலகை விட்டு மறைந்த சரோஜாதேவி படத்தை காய்ந்த இலையில் வரைந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கன்னடம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.
அவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMTராஜா எனும் கலைஞர் சரோஜாதேவி மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் விதமாக "உலகை விட்டு உதிர்ந்தது" என்று குறிப்பிட்டு காய்ந்த இலையில் அவரது படத்தை வரைந்து அஞ்சலி செலுத்தி உள்ளார்.