எதிர்பார்த்ததை விட ஜோ படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கோவை புருக்பாண்ட் சாலையில் உள்ள புரூக் பீல்டு மால் PVR தியேட்டரில், ஜோ திரைப்படத்தின் படக் குழுவினர் ரசிகர்களுடன் உரையாடினார்கள்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அப்படத்தின் கதாநாயகன் ரியோராஜ், ’இந்த படம் பல்வேறு பகுதிகளில் திரை அரங்கில் ஹவுஸ்புல் ஆக ஓடுகிறது என்று கூறினார்கள். அதை நேராக பார்க்க வேண்டும் என விரும்பினோம். ஈரோடு, திருப்பூர் திரை அரங்கு காட்சியை பார்த்து விட்டு, கோவை வந்தோம்.
ரசிகர்கள் எங்களிடம் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஒரு காதல் கதை, காதலைத் தாண்டி பல்வேறு விஷயங்கள் இப்படத்தில் உள்ளது.
என்னுடைய ஊர் ஈரோடு, கேரளா தமிழ்நாடு பார்டர். அதனால் தான் இங்கு நாங்கள் ஷூட் செய்தோம். அடுத்த படம் பற்றி நான் யோசனை செய்யவில்லை.
இந்த படம் நல்ல ஃபீல் கொடுத்தது, நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் அழுது விட்டார்கள். இந்த படத்தில் முதல் பாதி காதல் என்பது அனைவருக்கும் வரும்.
நாங்கள் எதிர்பார்த்ததை விட இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என ரியோராஜ் கூறினார்
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“