கோவையில் நடைபெற்ற நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவில், மாற்றுத்திறனாளி மாணவி ஆர்த்தி கலந்து கொண்டது ரசிகர்களிடம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
சமீபத்தில் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்சன் சென்டரில் நடந்த நிகழ்ச்சியில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து, சான்றிதழ்கள், ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்தினார்.
இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்..
கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஆர்த்தி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 க்கு 547 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். அவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
Advertisment
Advertisements
சக்கர நாற்காலியில் படுத்தபடி இருந்த ஆர்த்திக்கு நடிகர் விஜய், மேடையை விட்டு இறங்கி அவர் இருந்த இடத்திற்கே சென்று சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தது காண்போரை நெகிழ செய்தது.
இந்நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கோவை போத்தனூர் பகுதியில் உள்ள திரையரங்கில் மாஸ்டர் படம் ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது.
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளி மாணவி ஆர்த்தி கலந்து கொண்டார். தொடர்ந்து மாணவிக்கு கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணியின் மாவட்ட தலைவர் கோவை விக்கி ரூபாய் 15,000 ஊக்கத்தொகை வழங்கி கவுரபடுத்தினார்.
தொடர்ந்து பேசிய மாணவி நடிகர் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“