/tamil-ie/media/media_files/uploads/2020/01/Colors-Kodeeswari-Kousalya-Kartika.jpg)
Colors Kodeeswari Kousalya Kartika
Colors Kodeeswari Kousalya Kartika : விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஹிட் அடித்தது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி. அந்த நிகழ்ச்சியை முதலில் நடிகர் சூர்யா தொகுத்து வழங்கினார். இரண்டாவது சீசனை பிரகாஷ் ராஜூம், மூன்றாவது சீசனை அரவிந்த் சாமியும் தொகுத்து வழங்கினர். அதன் பின்னர் இது போன்ற ரியாலிட்டி ஷோவிற்கு பெரிய இடைவெளியே வந்துவிட்டது. பின்னர் தமிழில், பெண்களுக்காகவே நடத்தப்பட்ட ரியாலிட்டி ஷோ தான் கோடீஸ்வரி. இதனை தொகுத்து வழங்குகிறார் நடிகை ராதிகா.
கலர்ஸ் டிவியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு கலர்ஸ் டிவியில் நடைபெற்று வருகிறது. 31 வயது மிக்கவர் மதுரையைச் சேர்ந்த கௌசல்யா கார்த்திகா. இவர் இந்த கோடீஸ்வரி நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு கோடி ரூபாய் பரிசினை வென்றிருக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/Colors-Kodeeswari-Kousalya-Kartika-2-1024x682.jpg)
இந்த போட்டியின் இறுதி சுற்றில் 1948ம் ஆண்டு வெளியான எந்த நாவலில், இரண்டாம் புலிகேசியின் கற்பனை சகோதரரான நாகநந்தி குறித்து தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தரப்பட்ட ஆப்சனில் பார்த்திபன் கனவு, வேங்கையின் மைந்தன், சிவகாமியின் சபதம் மற்றும் யுவன ராணி தரப்பட்டது. ஆப்சன் சியில் இடம் பெற்றிருந்த சிவகாமியின் சபதத்தை தேர்வு செய்து ஒரு கோடியை வென்றுள்ளார் கௌசல்யா கார்த்திகா.
தமிழ்நாட்டின் முதல் கோடீஸ்வரி எனும் சாதனை படைத்த கெளசல்யா ????????????????#ColorsKodeeswari | @RealRadikaa | @SPNStudioNext | #Kousalyapic.twitter.com/ACBV9VRJeh
— Colors Tamil (@ColorsTvTamil) January 21, 2020
இவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. ஜூனியர் அசிஸ்டெண்ட்டாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார் கௌசல்யா. இந்த வெற்றி குறித்து கேட்ட போது. என்னுடைய வாழ்நாளில் நான் ஒவ்வொன்றிற்கும் என்னுடைய உறவினர்கள் மற்றும் பெற்றோர்களையே சார்ந்திருந்தேன். ஆனால் நான் எதை செய்கின்றோனோ அதனை நன்றாக கற்று, அதில் சிறந்த விளங்க விரும்பினேன். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பினை வழங்கிய கலர்ஸ் டிவிக்கு நன்றி என அவர் குறிப்பிட்டிருந்தார்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us