கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘கன்னித்தீவு – உல்லாச உலகம் 2.0’ என்ற புதிய காமெடி ரியாலிட்டி ஷோ ஒளிப்பரப்பாகவுள்ளது.
தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும் காமெடி ஷோக்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன. காமெடி நிகழ்ச்சிகள் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. இந்த நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியும் ஒரு காமெடி ரியாலிட்டி ஷோவை தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ‘கன்னித்தீவு – உல்லாச உலகம் 2.0’ என பெரியடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாகவுள்ளது.
இந்த நகைச்சுவை நிகழ்ச்சியில், தமிழ் தொலைக்காட்சிகளின் முன்னனி நகைச்சுவை நடிகரான ரோபோ ஷங்கர் கன்னித்தீவின் ராஜாவாக களம் இறங்குகிறார். இதில் அவர் ஜல்சானந்தா என்ற ராஜாவாக வரப்போகிறார். இவருக்கு ஜோடியாக ஷகீலா, ராஜமாதாவாக வருகிறார். இவர்களுடன் அமுதவாணன் மற்றும் பேபி மாதாவாக மதுமிதாவும் உள்ளனர்.
மேலும், இவர்களுடன் ராஜகுரு கேரக்டரில் திண்டுக்கல் சரவணனும், விஞ்ஞானிகளாக முல்லை மற்றும் கோதண்டமும் கலந்துக் கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சி வார வாரம் ராஜாவை குதூகலப்படுத்த தீவுக்கு பலர் வந்து நகைச்சுவை செய்வதுபோல் உள்ளது. இதனால் காமெடி தூக்கலாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த தீவுக்கு வாரம்தோறும் ஒரு சிறப்பு விருந்தினர் வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆரம்ப விழாவின் சிறப்பு அழைப்பாளராக நடிகை வரலட்சுமி சரத்குமார் கலந்துக் கொள்கிறார்.
தமிழ் தொலைக்காட்சிகளின் முன்னனி நகைச்சுவை நடிகர்கள் கலந்துக் கொள்வதால் நிகழ்ச்சியில் காமெடி கியாரண்டியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. புதுவிதமான இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு நல்ல நகைசுவை விருந்து படைக்கும் என கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி குறித்து ராஜா ரோபோ ஷங்கர் கூறுகையில், சின்னத்திரையில் எனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பிக்கிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார். மேலும், கன்னித்தீவு என்ற இந்த ஐடியா, தனித்துவமாகவும், புதுமையாகவும் இருக்கிறது. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகும் அளவுக்கு நிகழ்ச்சி இருக்கும் என எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil